Advertisment

வனிதா - பீட்டர் ரொமான்ஸ் போட்டோஸ்: நயன் ஜோடியை காலி பண்ணிட்டாங்க!

நடிகை வனிதா - பீட்டர் பால் ஜோடி குடும்பத்துடன் கோவா சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட ரொமான்ஸ் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
actress vanitha vijayakumar, vanitha peter paul, vanitha vijayakumar video, vanitha vijayakumar peter paul separation

வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமா உலகில் காதலர்களாக வலம் வரும் நயன்தாரா - விகினேஷ் சிவன் காதல் ஜோடியை மிஞ்சும் வகையில், நடிகை வனிதா - பீட்டர் பால் ஜோடி குடும்பத்துடன் கோவா சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட ரொமான்ஸ் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் ஜோடியைப் பற்றிதான் கோலிவுட்டின் தற்போதைய சுவாரசியமான பேச்சாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இருவரும் எங்கே சென்றாலும் ஜோடியாக செல்கின்றனர்.

அண்மையில் ஓணம் பண்டிகைக் கொண்டாட இருவரும் தனி விமானத்தில் கொச்சின் சென்றனர். பின்னர், அவர்கள் இருவரும் கோவா சென்று அங்கே விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை நடிகை நயன்தாரா பெரிய அளவில் கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை அடுத்து அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

கோலிவுட்டின் டாப் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் என்று சினிமா வட்டாரங்களும் நெட்டிசன்களும் கருதி வந்த நிலையில், அவர்களை வனிதா - பீட்டர் பால் ஜோடி முந்தியுள்ளனர்.

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் சினிமா வட்டாரத்தில் மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். வனிதா விஜயகுமார் 2 முறை திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்றிருந்தார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு, நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஏற்கெனவே, திருமணமான பீட்டர் பால் முதல் மனைவியை விட்டு 8 ஆண்டுகளுக்கு மேல் பிரிந்திருந்த நிலையில், வனிதாவை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்துக்கு பீட்டர் பால் மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையானது. ஒருவழியாக சர்ச்சையெல்லாம் ஓய்ந்த பிறகு, வனிதா - பீட்டர் பால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்தது.

 

View this post on Instagram

 

Off to an adventure...

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

இந்த நிலையில், வனிதா - பீட்டர் பால் மற்றும் வனிதாவின் மகள்கள் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கே அவர்கள் இளம் காதலர்களை மிஞ்சும் அளவில் மகிழ்ச்சியாக சுற்றுலாவைக் கொண்டாடியுள்ளனர். கடற்கரையில் இருவரும் கைகோர்த்துக்கொண்டு ரொமாண்டிக்காக புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைபப்படங்களை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர வைரலாகி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

வனிதாவும் பீட்டர் பாலும் கோவாவில் ரொமாண்டிக் போஸில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் ரசிகர்கள், நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் ஜோடியை காலி பண்ணிட்டாங்க என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Cinema Vanitha Vijayakumar Viral Vanitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment