பிக்பாஸ் நிகழ்ச்சில் பங்கேற்கும் போட்டியாளருக்கு ஒரு அரசியல் தலைவர் ஆதரவாக பேசுவது சரியா? என்று நடிகை வனிதா கேள்வி எழுப்பி உள்ளார்.
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் இறுதி சுற்று இந்த வாரம் நடைபெற உள்ளது. விருப்பமான போட்டியாளர்களுக்கு வாக்களிப்பதற்காக நேரம் இப்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசிக கட்சியை சேர்ந்த விக்ரமன் பிக்பாஸ் 6-யின் போட்டியாளராக இருக்கிறார்.
இவர் பேசும் முற்போக்கு கருத்துக்களாலும், அவரது அரசியல் புரிதலும் பலரை கவர்ந்துள்ளது. மேலும் அவர் அனைவரின் விருப்பமான போட்டியாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை வெற்றிபெற வைக்க, அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் நேற்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கண்டங்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில் இதை விமர்சித்து முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகை வனிதா ட்வீட் செய்துள்ளார். “மதிப்பு நிறைந்த இடத்தில் இருக்கும் ஒரு கட்சி தலைவர் மற்றும் எம்.பி எப்படி, பிக்பாஸ் போட்டியாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூற முடியும். இதை அரசியல் ஆதாயம் என்றுதான் அழைக்க வேண்டும்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.