நடிகை வனிதா விஜயகுமார் தனது 2-வது மகளின் 14-வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜயுடன் சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமான வனிதா விஜயகுமார் அதனைத் தொடர்ந்து ராஜ்கிரனுடன் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார். பழங்ம்பெரும் நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளாக இவர், திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட வனிதாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் கடந்த 2007-ம் ஆண்டு வனிதா ஆகாஷ் தம்பதி பிரிந்த நிலையில், அதே ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் ஜெய்ராஜன் என்பரை 2-வது திருமணம் செய்துகொண்டார் வனிதா. இந்த தம்பதிக்கு ஜெனித்தா ராஜன் என்ற ஒரு மகள் இருக்கிறார்.
கடந்த 2012-ம் ஆண்டு ஆனந்த் ஜெய்ராஜனை பிரிந்த வனிதா விஜயகுமார் தனது இரு மகள்களுடன் தனியாக வாழ முயற்சித்த நிலையில், ஆனந்த் ஜெய்ராஜன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனது மகளை வனிதாவிடம் இருந்து பிரிந்து அழைத்து சென்றுவிட்டார். தற்போது அந்த மகளுக்கு 14 வயதாகும் நிலையில், தனது தாய் வனிதாவுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
வனிதாவின் முதல் கணவருடனான மகன் தனது தந்தையுடன் வசித்து வரும் நிலையில், 2-வது கணவரின் மகள் ஜெனித்தா தனது தந்தையுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். தற்போது முதல் கணவருடனான மகள் மற்றும் 2-வது கணவருடனான மகள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எங்கள் வீட்டு குட்டி அரசிக்கு 14 வயதாகிடுச்சி என்று பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வனிதாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”