நாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா

வனிதாவிடம் ஃபோன் மூலமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் நாஞ்சில் விஜயன். இதனை வனிதாவும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.

By: Updated: August 4, 2020, 11:32:51 AM

ஏற்கனவே திருமணமான பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார்  திருமணம் செய்துக் கொண்டார். இது தொடர்பான சர்ச்சைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகின்றன. இதனால் பல பிரபலங்களுடன் வனிதா, சமூக ஊடகங்களில் வார்த்தைப் போரை நடத்தி, இப்போது அவர் சண்டையிடுவதற்கு குறைவான நபர்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது.

கொரோனாவுக்கு பலியான ராணிப்பேட்டை நர்ஸ்: போராடி நடந்த இறுதிச் சடங்கு

தன்னிடம் விவாகரத்து பெறாமல் மறுமணம் செய்துக் கொண்டதாக, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து ஹெலனுக்கு ஆதரவாக யூடியூபர் சூர்யா தேவி, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் இணையதளங்களில் பேட்டியளித்தனர். இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது.

இதற்கிடையே சூர்யா தேவிக்கும் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக வனிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால் நாஞ்சில் விஜயனும் வனிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். பின்னர் நாஞ்சில் விஜயனும், சூர்யா தேவியும் மது கோப்பைகளுடன் இருக்கும் படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்தார் வனிதா.

தற்போது வனிதாவிடம் ஃபோன் மூலமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் நாஞ்சில் விஜயன். இதனை வனிதாவும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் வனிதா விஜயகுமார், “நாஞ்சில் விஜயன் எனக்கு போன் செய்து பேசினார். நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னார். அவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. எனக்கும் அவருக்கும் எந்த பிரச்னையுமில்லை. இவை அனைத்துக்கும் காரணம் சூர்யா தேவி தான். இடையில் கஸ்தூரி உள்ளே புகுந்து இருக்கும் சூழ்நிலையை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.என்னைப் பற்றிய தவறான வீடியோக்களை தனது சேனலில் வைத்திருப்பதற்காக மோசமாக உணர்ந்தார். சம்பந்தமில்லாத ஒரு வழக்கில் நான் அவரைப் பற்றி புகார் அளித்ததால் அவர் கோபமடைந்திருப்பதாக, விளக்கினார். நடுவில் இருந்த சிலர் அவரை தவறாக சித்தரித்திருக்கிறார்கள்.

Tamil News Today Live : கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு

நாஞ்சில் விஜயனிடம் அவரது வீடியோக்கள் குறித்த எனது அதிருப்தியை வெளிப்படுத்தினேன். அதை நீக்குவதாகவும், அதுகுறித்து விளக்கம் ஒன்றை வெளியிடுவதாகவும் தெரிவித்தார். அவர் தேவையில்லாமல் இந்த விஷயத்தில் இழுத்து விடப்பட்டுள்ளார் என நினைக்கிறேன். திறமையான அவர் வளர்ந்து வரும் நேரத்தில் சர்ச்சைகள் தேவையில்லை என்று நினைத்ததால் அவர் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன்” இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vanitha vijayakumar accepts nanjil vijayans apology

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X