விஜய் டியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று கலக்கிய வனிதா விஜயகுமார் இனி சன் டிவியைக் கலக்கப்போகிறார் என்பதை புரமோ வீடியோ மூலம் தீபாவளி தவுசன் வாலாவாக கொளுத்திப் போட்டிருக்கிறார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஜூன் 23 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், இயக்குனர் சேரன், லாஸ்லியா, கவின், சரவணன், முகேன், தர்சன், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் முகேன் பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை வென்றார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தனது வெளிப்படையான தைரியமான குணத்தின் மூலம் குறிப்பிடும் வகையில் கவனத்தை ஈர்த்தவர் வனிதா விஜயகுமார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் அதிரடியாக செயல்பட்ட வனிதா விஜயகுமார் பார்வையாளர்கள் வாக்களிக்காததால் நிகழ்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமில்லாமல் போனதை உணர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீண்டும் வனிதாவை பிக்பாஸ் வீட்டுக்குள் வரவழைத்தனர்.
வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் அந்த நிகழ்ச்சி களைகட்டியது என்பது கண்கூடாகத் தெரிந்தது. அதனால்தான், வனிதா விஜயகுமாருக்கு பிக்பாஸ் நிறைவு விழாவில் தைரியமான போட்டியாளர் என்ற டைட்டில் கொடுக்கப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துவிட்டாலும் அந்த நிகழ்ச்சியைப் பற்றிய சுவாரசியங்கள் இன்னும் பேசப்படுகிறது. அதில் பங்கேற்றவர்கள் பலரும் பிரபலமாகியுள்ளனர். அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் வரத்தொடங்கியுள்ளது.
அந்த வகையில், வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. சன் டிவியிலும் ஒரு சீரியலில் வனிதா விஜயகுமார் நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அது பற்றி யாரும் உறுதிப்படுத்தவில்லை.
பிக் பாஸில் தைரியமாக வெளிப்படையாக இருந்த வனிதாவை டிவியிலோ அல்லது சினிமாவிலோ பார்க்க பார்வையாளர்கள் ஆர்வமாக இருந்தனர் என்பதையே இது போன்ற பேச்சுகள் காட்டியது.
இந்நிலையில், தீபாவளி அன்று வனிதா விஜயகுமார் ஒரு தவுசன்வாலா பட்டாசைப்போல டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டு அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளார்.
இந்த நிலையில், வனிதா விஜயகுமார் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமான சந்திரலேகா படத்தில் அறிமுகமானதைப் போல, சன் டிவியில் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் சந்திரலேகா சீரியலில் நடிக்க உள்ளதை புரமோ விடீயோவாக டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கலக்கிய வனிதா விஜயகுமார் இனி சன் டிவியில் சந்திரலேகாவை கலக்கப்போகிறார் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.