வனிதாவின் கிறிஸ்துமஸ் அட்ராசிட்டி.. மேக்கப் பார்த்து ரசிகர்களின் ரியாக்‌ஷன்ஸ்!

வனிதாவை கலாய்த்தும் இருந்தனர். அதற்கு எல்லாம் சளைத்தவரா வனிதா?

vanitha vijayakumar age vanitha peter paul
vanitha vijayakumar age vanitha peter paul

vanitha vijayakumar age vanitha peter paul : எதையுமே பட்டென்று உடைத்துப் பேசியே பழக்கப்பட்டவர் வனிதா விஜயகுமார். பேச்சு மட்டுமல்ல, அவரது செய்கையும் வெளிப்படையானது. விஜயகுமாரின் மகள் வனிதா ஒருசில படங்களில் நடித்தாலும் விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் மூலம் மீண்டும் சினிமா வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் நபராக மாறினார்.

ஏற்கனவே,அவரின் முதல் திருமண சர்ச்சை, பையன் ஸ்ரீஹரி விஜய் பிரிவு, ராபர்ட் மாஸ்டர் சர்ச்சை என வனிதா குறித்த ஏகப்பட்ட செய்திகள் பல நேரங்களில் விமர்சங்களை சந்தித்திருந்தது. அதன் பின்பு, விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் வனிதா மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனைத்தொடர்ந்து வனிதாவுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

அதனைப்பயன்படுத்தி கொண்டு ‘குத் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் கலக்கினார். அந்த சமையல் கலையை அப்படியே யூஸ் செய்து தனக்கென தனி யூடியூப் சேனலை தொடங்கினார். அதிலும் வனிதாவுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது, சர்ச்சை கிளம்பும் என தெரிந்தாலும், பீட்டர் பாலை மணந்தார்.

யூ டியூப் சேனல் தொடங்கும் முயற்சியில் இருந்த வனிதாவுக்கு, பீட்டர் பால் சில உதவிகள் செய்ய, அதில் இருவர் மனமும் இணைந்து கல்யாணத்தில் முடிந்தது. இன்னொருவரின் கணவரை மணப்பதா? என லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி என சிலர் கிளப்பிய சர்ச்சைகளுக்கு சுடச்சுட பதிலடி கொடுத்தார் வனிதா.

திருமணத்திற்கு பிறகு தனது குழந்தைகள், பீட்டர் பால் என ஒரே குடும்பமாக நின்று வீடியோ, போட்டோ என மகிழ்ச்சி பொங்க வெளியிட்டு வந்தார் வனிதா. சில காலம் மட்டும் இந்த சந்தோஷமும் நீடித்தது. பீட்டல் பால் உடனான உறவை முடித்து கொண்டான். இப்போது முழுக்க முழுக்க யூடியூப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஒருவாரம் முன்பே தொடங்கியவர், ஷாப்பிங், புஅடவை என கலக்கினார்.

கடைசியாக் மேக்கப் டிப்ஸ் வீடியோவையும் வெளியிட்டார். இந்த வீடியோவை பலரும் பார்த்து தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். ஒருசிலர் வனிதாவை கலாய்த்தும் இருந்தனர். அதற்கு எல்லாம் சளைத்தவரா வனிதா?

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijayakumar age vanitha peter paul vanitha vijayakumar twitter vanitha husband

Next Story
ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்rajinikanth Apollo rajinikanth health
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com