கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் கடுப்பான வனிதா விஜயகுமார்; வைரல் வீடியோ

நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் கோபப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

vanitha vijayakumar, vanitha vijayakumar viral video, vanitha vijayakumar angry in Kalakka Povathu Yaaru show, வனிதா விஜயகுமார், வைரல் வீடியோ, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கோபமடைந்த வனிதா, வைரல் வீடியோ, Kalakka Povathu Yaaru show, vanitha vijayakumar angry on bala, vijay tv, விஜய் டிவி, vanitha vijayakumar angry video, viral video, Kalakka Povathu Yaaru show viral video

நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் கோபப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா விஜயகுமார் பற்றி வாரத்துக்கு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகுவது வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில் வனிதா விஜயகுமார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கோபமடைந்து சத்தம் போட கலகலப்பாய் சிரிக்கும் செட்டேஅமைதியாகி உள்ளது. அந்த வீடியோவை நிகழ்ச்சி புரோமோவாக விஜய் டிவி சமூக ஊடகங்களில் வெளியிட்டதையடுத்து வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா விஜயகுமார் தொடர்ந்து சர்ச்சைகளுக்குள்ளாகி வருவகிறார். ஏற்கெனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்து பெற்ற வனிதா விஜயகுமாருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

பிக் பாஸ் சீசன்3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா மீண்டும் ஊடகங்களின் வெளிச்சத்திற்கு வந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு தொலைக்காட்சி வாய்ப்புகளும் வந்தது. இதனைத் தொடர்ந்து, பீட்டல் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தையொட்டி பெரிய சர்ச்சையானது. விரைவிலேயே, அவருடைய திருமணம் கருத்து வேறுபாடுகளால் முடிவுக்கு வந்தது.

இதனால், தொடர்ந்து, வனிதா சமூக ஊடகங்களில் நெட்டிசன்களால் தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில்தான், நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் கோபப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், ஈரோடு மகேஷ் கேள்விகளை கேட்க, வனிதா கால் மேல் கால் போட்டப்படி அமர்ந்திருக்கிறார். அப்போது அவருக்கு பின்னால் நின்றபடிய விஜய் டிவி பாலா, வனிதாவை கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் வனிதாவை கலாய்த்தபடி பதில் அளிக்கிறார்.

ஈரோடு மகேஷ், வனிதாவிடம் நீங்கள் அடிக்கடி போகும் ஃபேவரைட் இடம் எது என கேட்க பின்னால் இருக்கும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பாலா கமிஷனர் ஆபிஸ்தான் என்கிறார்.
அடுத்து மகேஷ், நீங்க யாரதான் ஃபாலோ பண்றீங்க என்று கேட்க, பெண்டிங் கேஸையெல்லாம் முடிக்க வக்கீல ஃபாலோ பண்றாங்க என்று வனிதாவை கலாய்க்கிறார் பாலா.

மீண்டும் மகேஷ், “வாலு படத்துல பணக்காரி ரோல் கொடுத்தா நடிப்பீங்களா” என கேட்கிறார் அதற்கு பாலா, மிஷ்கின் படத்தில் மீன்காரி வேஷம் கொடுத்தாலும் நடிப்பாங்க என்று தொடர்ந்து கலாய்க்கிறார். பாலா இப்படி கிண்டல் செய்வதைக் கேட்டு கேட்டு கடுப்பான வனிதா, எல்லாத்துக்குமே லிமிட்டுன்னு ஒன்னு இருக்கு புரியுதா என கோபமடைகிறார். “உங்களுக்கு வேற கன்டென்ட் கிடைக்கலையா? இதுதான் உனக்கு காமெடியா? என்று உச்சகட்ட கோபத்தில் வனிதா தனது பாணியில் விலாச கலகலப்பாய் சிரிக்கவைக்கும் மொத்த செட்டுமே அமைதியானது.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வனிதா காண்ட் ஆகி சத்தம் போட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijayakumar angry in kalakka povathu yaaru show viral video

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express