நடிகை வனிதா விஜயகுமார், மூன்றாவதாக திருமணம் செய்த பீட்டர் பால் என்பவரை பிரிந்துள்ள நிலையில், அவரைப் பற்றி வதந்தி பேசுவோருக்கு உங்கள் வேலையப் பாருங்கள் என்று வனிதா பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். வனிதாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த சூழலில்தான் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மீண்டும் பிரபல வெளிச்சத்திற்கு வந்தார். இதையடுத்து, வனிதாவுக்கு டீவி சீரியல் மற்றும் சில நிகச்சிகளில் வாய்ப்பை பெற்றார்.
இந்த சூழலில்தான், கொரோனா பொது முடக்க காலத்தில், சினிமா துறையில் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
திருமண செய்தி வெளியானதுமே சர்ச்சை வெடித்தது. பீட்டர் பால் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்றும் அவருடைய முதல் மனைவி எலிசபேத் ஹெலன் தனது கணவர், தன்னை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
எலிசபேத் ஹெலன், பீட்டர் பால் ஒரு குடிகாரர், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்று தெரிவிதார். நெட்டிசன்கள் பலரும் வனிதா அடுத்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டு மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார் என்று விமர்சனம் செய்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலளித்த வனிதா, நான் யார் வாழ்க்கையையும் கெடுக்கவில்லை, ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக இருந்தவரை தான் திருமணம் செய்து கொண்டேன். அவருக்கு குடிப்பழக்கம் கிடையாது என்று கூறினார்.
ஒருவழியாக சர்ச்சைகள் ஓய்ந்து வனிதா - பீட்டர் பால் திருமண வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தது. பீட்டர் பால் மற்றும் அவரது மகள்களுடன் வனிதா தனது 40வது பிறந்தநாளை கொண்டாட கோவாவுக்கு சென்றார். அங்கே பீட்டர் பால் மது அருந்தியதால் வனிதாவுக்கு பீட்டர் பாலுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இருவரும், சென்னை திரும்பிய பிறகு பீட்டர் பால், திடீரென காணாமல் போனார். பீட்டார் பால் வீட்டிற்கு கூட வராமல் எந்நேரமும் மது போதையில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், வனிதா - பீட்டர் பால் திருமணம் விரைவாக முடிவுக்கு வந்தது. இது குறித்து வனிதா காதல், திருமண வாழ்க்கை மீது நம்பிக்கை வைத்தே பீட்டர் பாலை மணந்தேன். ஆனால் அவருக்கு என்னை விட மது தான் முக்கியமாகிவுட்டது, நம்பி ஏமாந்துவிட்டேன் என்று தனது ஏமாற்றத்தை கண்ணீர் கதையாக கூறினார்.
வனிதா - பீட்டர் பால் திருமணம் முறிந்ததால், அடுத்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்தால் இப்படித் தான் நடக்கும் என்று வனிதாவை சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
தன்னைப் பற்றி இப்படி மோசமாக விமர்சனம் செய்பவர்களுக்கு வனிதா விஜயகுமார் கோபமாக பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து வனிதா விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில், “என் மீது அன்பும், அக்கறையும் வைத்திருக்கும் அனைவருக்கும்...என் வாழ்க்கையின் இன்ப, துன்பங்கள் குறித்து நான் உங்களுக்கு எப்பொழுதுமே தெரிவித்து வருகிறேன். என் வாழ்க்கை பற்றி கணித்து, கிசுகிசு பேசுபவர்கள் தயவு செய்து உங்க வேலையப் பாருங்கள். ஒரு போலி பி.ஆர்.ஓ. அரைவேக்காடு செய்தியை பரப்புகிறார்.
எல்லோருக்கும் தங்களுக்கு பிடித்தது போல வாழ உரிமை உண்டு. அவர்கள்தான் வாழ வேண்டும். வேறு யாரும் வாழ்வதில்லை. அதனால் என் வாழ்க்கையில் தலையிடுவதை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையை கவனிக்கவும். நான் தைரியமானவள், ஆசிர்விதிக்கப்பட்டவள், பலரின் அன்பும், ஆசியும் பெற்றவள். நான் எப்பொழுதும் நலமாக இருப்பேன். நன்றி” கோபமாக பதிலடி தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"