/tamil-ie/media/media_files/uploads/2021/08/vanitha-kannitheevu.jpg)
விஜய் டிவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, சின்னத்திரையை விட்டு ஒதுங்கி இருந்த வனிதா, கலர்ஸ் தமிழ் டிவியின் காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார்.
90களில் திரைப்படங்களில் நடித்து வந்த வனிதா, திருமணத்திற்கு பின் திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவான பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துக் கொண்டதன் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார். அதன்பின் விஜய் டிவியின் மற்றொரு ஹிட் ஷோவான குக் வித் கோமாளியில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். மேலும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வந்தார்.
பின்னர் விஜய் டிவி, பிக் பாஸ் பிரபலங்களைக் கொண்டு பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை ஒளிப்பரப்பி வருகிறது. இதில் போட்டியாளராக வனிதா கலந்துக்கொண்டார். அவருக்கு சுரேஷ் சக்ரவர்த்தி ஜோடியானர். நிகழ்ச்சியில் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட முரண்பாட்டால், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
அதன்பின், பிரசாந்தின் அந்தகன், வாசுவின் கர்ப்பிணிகள், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப் உள்ளிட்ட படங்களில் நடிக்க தொடர்ச்சியாக கமிட் ஆகி வந்தவர், தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியான ‘கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள வனிதா, சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இந்த காமெடி நிகழ்ச்சியில் ரோபோ ஷங்கர், ஷகீலா, மதுமிதா ஆகியோர் நடுவராக இருந்து வருகினறனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.