நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் ஜூன் 27-ஆம் தேதி தனது வீட்டில் வைத்து, பீட்டர் பால் என்பவரை மணந்தார். மறுநாள் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் தான் விவாகரத்து பெறவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார். தானும் தனது இரண்டு குழந்தைகளும் அவர் திரும்ப வர வேண்டும், என நினைப்பதாகவும் ஊடக நேர்க்காணலில் தெரிவித்து வந்தார். இதற்கிடையே தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் எலிசபெத்தை ஆதரித்து வருகின்றனர். இது வனிதாவை எரிச்சலடையச் செய்தது. இதனால் அவர் போரூர் போலீஸ் புகார் அளித்தார்.
விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’: முன்னணி நடிகைகள் நீக்கம்
தனது புகாரில், சூர்யா தேவி போதைப் பொருள் கடத்துபவர் என குற்றம் சாட்டியிருந்தார் வனிதா. அதற்கான ஆடியோ ஆதாரத்தையும் அவர் சமர்ப்பித்தார். ரவீந்தரும், நாஞ்சில் விஜயனும் சூர்யா தேவியுடன் சேர்ந்து, தனது தனது இமேஜை கெடுக்கிறார்கள். ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார் வனிதா.
சித்தி 2 சீரியலில் அதிரடி: பொன்வண்ணன் உட்பட 4 பேர் மாற்றம்
இதற்கிடையில் வனிதா விஜயகுமார், தன் மீது அவதூறு பரப்புவதாகக் கூறி, சூர்ய தேவி வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போரூர் போலீசார் வழக்கை வடபழனிக்கு மாற்றினர். இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை இரவு வனிதா தனது வழக்கறிஞருடன் காவல் நிலையத்தில் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக, பீட்டர் பாலுடனான திருமணம் மற்றும் சர்ச்சைகள் உட்பட பல விஷயங்கள் குறித்து, வனிதாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகவும், அவரது அறிக்கையை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”