New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/Vanitha-Vijayakumar-Vanitha-Complaints-against-ravindar-and-surya-devi.jpg)
வனிதா விஜயகுமார்
’புரூஃபை காட்டுங்கள், புரூஃப் இல்லாமல் நான் கூட ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் டாக்ட்ரேட் முடித்ததாக சொல்லுவேன்.."
வனிதா விஜயகுமார்
நடிகர் விஜய்யுடன் ‘சந்திரலேகா’ படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் நடிகை வனிதா விஜயகுமார். பின்னர் இளம் வயதிலேயே திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டார். இருப்பினும் சொந்த பிரச்னைகளில், செய்திகளில் வலம் வந்தார்.
இதற்கிடையே தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அங்கு நடந்த பெரும்பாலான சண்டைகளில் வனிதாவின் பெயர் இடம்பெற்றது. இதனால் ரசிகர்களிடம் வைரலானார். அதோடு பிக் பாஸ் இல்லத்தில் சிறந்த சமையல்காரர் என்ற பெயரையும் பெற்றார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும், விஜய் டிவி-யின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னரானார்.
இதைத் தொடர்ந்து தனக்கென யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி அங்கே பலவிதமான ரெசிபீக்கள், அழகு குறிப்புகள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருகிறார். அந்த லிங்குகளை தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இதற்கிடையே வனிதாவின் ரசிகர் ஒருவர், ’நீங்கள் என்ன குக்கிங் கோர்ஸ் படித்துள்ளீர்கள், என் மனைவிக்கு கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க ஆர்வம்’ எனக் கேட்டிருந்தார். அதற்கு, ’பேஸ்ட்ரி பேக்கிங் மற்றம் செஃபிங்’ முடித்துள்ளதாக கூறியிருந்தார் வனிதா. இதனைப் பார்த்த மற்றொரு ரசிகர், ’புரூஃபை காட்டுங்கள், புரூஃப் இல்லாமல் நான் கூட ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் டாக்ட்ரேட் முடித்ததாக சொல்லுவேன்.. புரூஃப் தேவை’ என்றார்.
இதற்கு பதிலளித்த வனிதா, யாருக்கும் யாரும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் என் பாஸோ அல்லது முதலாளியோ இல்லை.. நான் தான் எனக்கு பாஸ்..’ என்றார் கராராக.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.