Advertisment

’குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடலாம்’: குட்டி பத்மினி கருத்துக்கு வனிதாவின் பதிலடி

”இப்படி ஒரு இறந்தகாலத்தை வைத்துள்ள நீங்கள் இதைப் பற்றி பேசவே கூடாது. நான் உங்களது வயதுக்கு மற்றும் அனுபவத்திற்கு மரியாதை தருகிறேன்.”

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanitha Vijayakumar bold reply to Kutty Padmini

Vanitha Vijayakumar bold reply to Kutty Padmini

Vanitha Vijayakumar: நடிகை வனிதா விஜயகுமார், சினிமா டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை கடந்த வாரம் கரம் பிடித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கிறிஸ்தவ முறைப்படி வீட்டிலேயே நடந்த இத்திருமணத்தில், வனிதாவின் மகள்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துக் கொண்டனர். திருமணம் முடிந்த அடுத்த நாளே, பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீஸில் புகார் அளித்தார். அதில், தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே, பீட்டர் மறுமணம் செய்துக் கொண்டதாகவும், அவருக்கு குடிப்பழக்கம் மற்றும் பெண்களிடம் தவறான தொடர்பு இருந்ததாகவும் தெரிவித்தார்.

Advertisment

இதற்கு பதிலளித்த வனிதா, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் திருமண விழாவில் இருவரும் ஷாம்பெயின் பாட்டிலை திறந்த பிறகு, பீட்டர் பால் அதைக் குடிக்காமல் ஆல்கஹால் இல்லாத வேறொரு பானத்தை தான் குடித்தார் என தெரிவித்திருந்தார். அதோடு அவர் நான்வெஜ் கூட சாப்பிடுவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.

பின்னர் வனிதாவின் திருமணம் குறித்து, “நான் இப்போதுதான் செய்திகளைப் பார்த்தேன். அந்த மனிதன் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்றவர், விவாகரத்தும் செய்யவில்லை. நன்கு படித்த ஒருவர் எப்படி இப்படி ஒரு தவறை செய்திருக்க முடியும்..? அதே போல ஏன் அந்த முதல் மனைவி இவர்களுடைய திருமணத்தை நிறுத்த முற்படவில்லை..?” என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்டிருந்தார்.

அதற்கு, “இந்த உலக மிகவும் சிறியது, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்” என்று வனிதா பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து தனது கருத்துக்கு மன்னிப்புக் கோரினார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இந்நிலையில், தற்போது இன்னொரு திரைப்பிரபலமும் வனிதா வாழ்க்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு வனிதாவும் தன்னுடைய ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார். நடிகை குட்டி பத்மினி, வனிதா தன்னுடைய மகள்களை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடலாம் என அட்வைஸ் கொடுத்திருந்தார். இதற்கு, “குட்டி பத்மினி இந்த இடத்தில் உங்களைப்பற்றி கமெண்ட் செய்வதற்கு என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என்னிடம் பேசாமல் இங்குதான் பேசி இருந்தீர்கள். நீங்கள் என்னை ஒரு நேர்காணலுக்கு அழைத்திருக்கலாம், நான் ஒப்புக் கொண்டு இருப்பேன். உங்கள் மீது எனக்கு அதிக மரியாதை உள்ளது. ஆனால் தற்போது உங்கள் நோக்கம் என்ன என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்களிடம் ஒன்றே ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். என் குழந்தைகளை பற்றி நீங்கள் கொடுத்த மோசமான பரிந்துரைக்கு நன்றி. நான் உங்களை போன்று இல்லை.

என்னால் என்னை பார்த்துக் கொள்ள முடியும். எனக்கு ஆதரவு தேவைப்பட்ட போது ஒருவர் கூட வரவில்லை. உங்களாலும் எனக்கு உதவி செய்ய முடியாது. சொசைட்டி பற்றி பேசுகிறீர்கள். இப்படி ஒரு இறந்தகாலத்தை வைத்துள்ள நீங்கள் இதைப் பற்றி பேசவே கூடாது. நான் உங்களது வயதுக்கு மற்றும் அனுபவத்திற்கு மரியாதை தருகிறேன். நீங்கள் உங்களது சேனலில் மற்றவர்களது வாழ்க்கை பற்றி பேசுவதை நிறுத்துங்கள்.

நீங்கள் அமர்ந்து மற்றவர்களைப் பற்றி கிசுகிசுக்களை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சேனலை நடத்தும் விதம் மிகவும் சுயநலமாகவும் அவமானமாகவும் இருக்கிறது. ஒருவர் இல்லாத நேரத்தில் அவர்களை பற்றி பேசுவது அவர்களது முதுகில் குத்துவது போன்றது. குறிப்பாக நீங்கள் எடுத்துள்ள முடிவுகள் பற்றி நான் விமர்சனம் செய்யட்டுமா. உங்களது குழந்தைகளுக்கு மீடியாவில் உள்ள எதிர்காலம் பற்றி நான் பேசட்டுமா. ஆனால் என்னால் என் வாழ்க்கையில் இல்லாத மற்றவர்கள் பற்றி தவறாக பேசாமல் என்னால் பணம் சம்பாதிக்க முடியும். எனக்கு அந்த திறமை இருக்கிறது. நீங்கள் இதையும் தெரிந்து கொள்ளுங்கள். எனக்கும் ஒரு ஆசை இருக்கிறது. இது உங்களுக்குத் தேவைப்படும். இந்த மட்டமான பப்ளிசிட்டியை உங்களது சேனலுக்கு தரும் என நான் நம்புகிறேன்" என பதில் கூறியிருந்தார்.

பின்னர், “நான் பேசியது உங்களை காயப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கும் முதிர்ச்சி என்னிடம் இருக்கிறது. நீங்கள் என்னை புரிந்து கொள்ளாதது வருத்தமாக இருக்கிறது" என குட்டி பத்மினி வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதற்கு மீண்டும் பதிலளித்த வனிதா, "மன்னிப்பு கேட்டதற்கு நன்றி, குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி விடுங்கள் என முதிர்ச்சியற்ற ஒரு அறிவுரையை நான் எதிர்பார்க்கவில்லை. என் குழந்தைகள் தான் என்னுடைய வாழ்க்கை மற்றும் என்னுடைய உலகம். உங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள். ஏனென்றால் எல்லா பிரபலங்களும் பதிலடி கொடுக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் வருத்தம் இருக்கத்தான் செய்யும்" எனக் கூறியுள்ளார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment