New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/11/vanitha-vijayakumar-1200.jpg)
Vanitha Vijayakumar haircolor viral photo instagram
Vanitha Vijayakumar Viral Photo சமீபத்தில் பீட்டர் பாலை விட்டுவிலகி தற்போது 'சிங்கிள் மாம்' பட்டத்திற்கு மீண்டும் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறார்.
Vanitha Vijayakumar haircolor viral photo instagram
Vanitha Vijayakumar Viral Post : குடும்பத்துடனான சர்ச்சைகளைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு விஜய் டிவியின் பிக் பாஸ் 3 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்றார் நடிகை வனிதா விஜயகுமார். பிக் பாஸ் வீட்டில் 'கொளுத்திப் போடுவதில்' ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். அதிலும் அந்த வீட்டினுள் அவருடைய இரு மகள்களின் வரவு, அதுவரை வனிதா மீதான பார்வையை முற்றிலும் மாற்றியது. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் 'குக்கு வித் கோமாளி', 'கலக்கப்போவது யாரு' போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டார்.
வெளிநாட்டுக்குச் சென்று சமையல்கலை கற்றுவந்தவர், தனக்கென பிரத்தியேக சமையல் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கினார். இந்த சேனல் மூலம் பழக்கமான பீட்டர் பால் என்பவரைக் காதலித்து சில மாதங்கள் முன்பு திருமணமும் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தைத் தொடர்ந்து ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டிருந்த வனிதா, சமீபத்தில் பீட்டர் பாலை விட்டுவிலகி தற்போது 'சிங்கிள் மாம்' பட்டத்திற்கு மீண்டும் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமுக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் வனிதா, சமீபத்தில் தன் கருமையான கூந்தலுக்கு நீலம், பச்சை, பிங்க், பர்கண்டி உள்ளிட்ட ஏராளமான வண்ணங்கள் தீட்டிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்திருக்கிறார்.
"இந்த பண்டிகை காலத்தில், என் வாழ்க்கையில் அதிக வண்ணங்களைச் சேர்க்க முடிவு செய்திருக்கிறேன்... விழாக்கள் ஆரம்பிக்கட்டும்" என்ற கேப்ஷனோடு வனிதா இணைத்திருக்கும் புகைப்படம்தான் தற்போதைய இணையதள வைரல்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.