/tamil-ie/media/media_files/uploads/2021/07/vanitha-bb-jodi-crying.jpg)
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீர் விட்டு அழுத ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஒளிப்பரப்பாகிறது. விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின், இதுவரை ஒளிப்பரப்பான நான்கு சீசன்களின் பிரபலங்கள் இந்த ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவதால், இந்த டான்ஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் உள்ளனர். இதில் ஒரு போட்டியாளராக பங்கேற்று வருகிறார் நடிகை வனிதா விஜயகுமார். முதலில் ஜோடி இல்லாமல் ஆடிய வனிதாவுக்கு, தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி ஜோடியாகியுள்ளார்.
இந்த வார எபிஷோடில், ரொமான்ஸ் ரவுண்டுக்கு போட்டியாளர்கள் நடனமாடுகின்றனர். இதில் வனிதாவும் சுரேஷூம் பழைய படங்களில் இடம் பெற்ற காதல் பாடல்களுக்கு நடனமாடுகின்றனர். இவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் வனிதாவின் அம்மா மஞ்சுளா நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம்பெற்ற ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடலுக்கு நடனமாடுகின்றனர்.
வனிதா மற்றும் சுரேஷின் நடனம் சூப்பராக இருந்ததாக பாராட்டும் ரம்யா கிருஷ்ணன், இன்று வரை நான் மஞ்சுளாவை மிஸ் பண்ணுகிறேன், அவங்கள போல் ஒரு மனுஷியைப் பார்க்க முடியாது என மஞ்சுளாவையும் புகழ்ந்து பேசுகிறார். மேலும் இது போன்ற வாய்ப்பு எல்லா மகள்களுக்கும் கிடைக்காது என வனிதாவிடம் கூறுகிறார்.
தன் தாயிற்கு வனிதாவின் சமர்ப்பணம்! ❤️#BB ஜோடிகள் - வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBJodigal#BiggBossJodigal#VijayTelevisionpic.twitter.com/jn9D9cCo0N
— Vijay Television (@vijaytelevision) July 2, 2021
அதற்கு வனிதா, செம பாடல், 50 வருடங்களுக்குப் பிறகு அதே பாடலுக்கு நான் ஆடுகிறேன் என்றால் அது வேற லெவல் என்கிறார். அப்போது ஸ்கீரினில் மஞ்சுளாவின் புகைப்படம் வர, அதைப்பார்த்து கண்ணீர் விட்டு கதறுகிறார் வனிதா. தன் தாயை நினைத்து வனிதா கண்ணீர்விட்டு அழுதது, எல்லோரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.