பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார்.
விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் சீசன் 7 இன்று தொடங்கியுள்ளது. கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்தநிகழ்ச்சியில் ஆச்சரிய என்ட்ரியாக நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் போட்டியாளாராக களமிறங்கியுள்ளார். ஜோவிகா தனது தாய் வனிதாவுடன் யூடியூப் சேனலில் சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜோவிகாவுக்கு 40 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். விரைவில் திரைத்துறைக்கு வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஜோவிகா தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கையில், "நான் ஜோவிகா, நான் வனிதாவின் மகள். என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், நான் வேடிக்கையாகவும், புதியவர்களைச் சந்திக்கவும் விரும்புகிறேன். என்னால் படிப்பை நன்றாகச் செய்ய முடியவில்லை. என் அம்மா என் பள்ளிகளை மாற்றி, அவளால் முடிந்தவரை முயற்சி செய்தார். ஆனால். நான் கஷ்டப்பட்டு மன அழுத்தத்துடன் இருப்பதைப் பார்த்து, நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள். நான் நடிகையாக வேண்டும் என்று சொன்னேன்,” என்று கூறினார்.
முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா, நிகழ்ச்சிக்கு ஏதாவது டிப்ஸ் கொடுத்தாரா என்று கமல் கேட்டதற்கு, “இல்லை.. சாதாரணமான விஷயங்களைச் சொன்னார்” என்று சிரித்தார் ஜோவிகா. நிகழ்வில் கலந்து கொண்ட வனிதா, "யாருக்காகவும் மாறாதே. மற்றவர்களுக்கு நீ சரியாகவோ தவறாகவோ இருந்தாலும் பரவாயில்லை, உனக்கு உண்மையாக இரு" என்று டிப்ஸ் கொடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“