Advertisment

வனிதா மேற்பார்வையில் ஜோவிகா க்யூட்டான மேக்கப்: ஸ்பெஷல் போட்டோஷூட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான வனிதா விஜயகுமாரின மகள் ஜோவிகா தொடர்பான போட்டோஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Vanitha Jovika 0207

ஜோவிகா விஜயகுமார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜோவிகா விஜயகுமார் தற்போது தனது அம்மா வனிதாவின் மேற்பார்வையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரின் வாரிசு என்ற அடையாளத்துடன் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக அறிமுகமாகி இருந்தாலும், அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறாத நிலையில், திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்ற இவர், டிவி நிகழ்ச்சிகளின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சாம்பியனான வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. வனிதாவை போல் அவரது மகள் ஜோவிகாவும், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற அவர், மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோருடன் இணைந்து, பிரதீப்-க்கு ரெட் கார்டு கொடுத்தது, படிப்பு தொடர்பாக விசித்ராவுடன் மோதலில் ஈடுபட்டது எனபிக்பாஸ் வீட்டில் தான் இருந்தவரை மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடி வந்தார். 105 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 63-வது நாளில் ஜோவிகா வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள ஜோவிகா தற்போது சமூவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மட்டும் இல்லாமல், அவரது அம்மா வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா தொடர்பான பதிவுகளை வெளியிட்டு அசத்தி வருகிறார். அந்த வகையில் தனது மகள் ஜோவிகாவின் போட்டோஷூட் தொடர்பான வீடியோவை வனிதா தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

பாரம்பரிய உடை, ஸ்டைலிஷான உடை என வித்தியாசமான கோணங்களில் புகைப்படங்கள், மற்றும் போட்டோஷூட்க்கு தயாராக மேக்கப் போடுவது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே ஜோவிகாவுக்கு சினிமா வாய்ப்பு வந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது வனிதா தனது மகளுக்கான சினிமா வாய்ப்பை பிரகாசப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது தெரிகிறது.

Vanitha Vijayakumar Jovika Vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment