Vanitha Vijayakumar emotional speech about his Dad: அப்பாவோட சேர ஆசையா இருக்கு, ரஜினி அங்கிள் அதுக்காக முயற்சி எடுத்தார் என நடிகை வனிதா விஜயகுமார் கண் கலங்க கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 90 களில் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வனிதா. பின்னர் ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில், சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பின்னர் திரைத்துறையை விட்டு விலகி இருந்தவர், விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவான பிக் பாஸ் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார். அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். தற்போது ஒரு சில படங்களிலும் வனிதா நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் கலந்துக் கொண்டார். வனிதா
இந்த நிலையில் Behindwoods யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தன் அப்பாவுடன் சேர ஆசை என்றும், ரஜினி அங்கிள் அதுக்காக முயற்சி எடுத்தார் என்றும் கண் கலங்கி கூறியுள்ளார் வனிதா.
பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தின் ப்ரோமோஷனுக்காக, நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் இயக்குனர் தியாகராஜன் இருவரும் Behindwoods யூடியூப் சேனலின் நேர்காணலில் கலந்துக் கொண்டனர். அப்போது வனிதா இந்த படத்தில் ஏற்றுள்ள கதாப்பாத்திரம் குறித்தும், படம் குறித்தும் இருவரும் பேசினர்.
இதையும் படியுங்கள்: குழந்தை பாப்பா பிறந்த பிறகும் அந்த சீரியலுக்கு வரமாட்டேன்… ஆல்யா மானசா கொடுத்த ஷாக்!
அப்போது தியாகராஜன், நீ உங்க அப்பாவ மிஸ் பண்றியா என கேட்க, அதுவரை ஜாலியாக பேசி வந்த வனிதா சட்டென உடைந்து, நிச்சயமா, ரொம்ப மிஸ் பண்றேன் என்று கணகள் கலங்கியவாறே கூறினார். உடனே தியாகராஜன், நீ ஏன் அவரை திரும்ப சந்திக்க கூடாது? அதுக்கு வாய்ப்பே இல்லையா? என கேட்க, வனிதா எனக்கு தெரியல என்று கலங்குகிறார். நான் வேண்டுமானால் அவர்கிட்ட பேசட்டுமா? வனிதாவோட அப்பா ரொம்ப நல்லவர், அவரோட பொண்ணு வனிதாவும் நல்ல பொண்ணு தான், அவங்க குடும்பம் ஒண்ணு சேரணும், அதுதான் என்னோட ஆசை என சொல்கிறார்.
அப்போது வனிதா, நான் அப்பாவோட சேர முயற்சி பண்ணுனேன். அப்புறம் கபாலி பட நேரத்தில் ரஜினி அங்கிள் கிட்ட பேசுனேன். அவரு ரொம்ப ஃபீல் பண்ணாரு, அப்பாகிட்ட பேசுனாரு, ஆனா முடியல, அதுக்கு அப்புறம் நான் பார்த்தவரைக்கும் ரஜினி அங்கிளே, அப்பாகிட்ட இருந்து தள்ளி இருக்குற மாதிரி தெரியுது. குடும்பத்திற்குள் பிரச்சனை வருவது இயல்பு தான். சிலரால் தான் அப்பாவோட சேர முடியல, விரைவில் நடக்கும் என்று கூறுகிறார். அப்போது தியாகராஜன், சீக்கிரம் நடக்கும் கவலைப்படாதே என ஆறுதல் படுத்துகிறார். இந்த வீடியோ தற்போது யூடியூபில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil