எனக்கு ஜோடி எங்கே? விஜய் டிவி நிகழ்ச்சியில் காண்டான வனிதா

விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, “இந்த ஷோ ஒத்துக்கும்போது அடிப்படையா புரிஞ்சுகிட்டது. இது டான்ஸைத் தாண்டி இந்த ஷோ ஜோடிகள் இல்லையா? இப்போ என் ஜோடி எங்கே?” என்று கேட்டு காண்டாகி விட்டார்.

vanitha vijayakumar asks where is pair, vijay tv, bigg boss jodigal, விஜய் டிவி, பிக்பாஸ் ஜோடிகள், வனிதா விஜயகுமார் டான்ஸ், எனக்கு ஜோடி எங்கே என கேட்ட வனிதா, நகுல், ரம்யா கிருஷ்ணன், ஈரோடு மகேஷ், nakul, ramya krishnan, erode makesh, bb jodigal, vijay tv, vanitha vijayakumar dance

விஜய் டிவியில் நேற்று (மே 9) பிக் பாஸ் ஜோடிகள் என்று ஒரு புதிய டான்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்சியில் கலந்துகொண்ட வனிதா விஜயகுமாருக்கு டான்ஸ் ஆடும்போது ஜோடி இல்லாததால் எனக்கு ஜோடி எங்கே என்று கேட்டு காண்டாகிவிட்டார்.

விஜய் டிவியின் ப்பிக் பாஸ் ஜோடிகள் புதிய டான்ஸ் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன்களில் போட்டியாளர்களாக அனிதா சம்பத், பாலாஜி முருகதா, நிஷா, பாலாஜி, கேபி, சோம் சேகர், ஜித்தன் ரமேஷ், மோகன் வைத்யா, பாத்திமா பாபு என்று பலரும் கலந்துகொண்டனர். ஆரி, சென்ராயன், ஷிவானி நாராயணன் என பலரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிஷா – பாலாஜி, ஜித்தன் ரமேஷ், மோகன் வைத்யா – பாத்திமா பாபு என ஜோடியாக வந்து அவர்கள் அளவில் நன்றாக பெர்ஃபார்மன்ஸ் செய்தார்கள். பிக் பாஸ் ஜோடிகள் என்றால் வனிதா விஜயகுமார் இல்லாமல் எப்படி? அதனால், ஈரோடு மகேஷ் வனிதாவை வரவேற்று இண்ட்ரோ கொடுத்தார்.

ஈரோடு மகேஷ் அதாவது தம்பி யாராவது ஒருத்தர் நல்லா பெர்ஃபார்ம் பண்ணிட்டா ஊரு பேசும், ஆனால், இவங்க எப்ப பேசினாலும் ஊரே பேசும். எத்தனை பேரு எதிர்த்து வந்தாலும் எதிர்த்து நிற்கிற ஒரு பெண் சிங்கம்யா… லெட்ஸ் வெல்கம் வனிதாக்கா என்று வரவேற்றார்.

வனிதாவுக்கு ஒரு கெத்தான அறிமுகமாக, பிக்பாஸ் 3 பார்த்திருக்கீங்களா? எங்க அக்கா கெத்தைப் பத்தி தெரிஞ்சுக்காதவங்க இந்த ஊர்ல யாருமே இல்ல. 16 பேரை நிக்கவச்சு கேள்வி கேக்கறதுன்னா சும்மாவா? யாரால முடியும்? பொண்ணுங்க எப்படி வாழனும். எப்படி இருக்கனும்ங்கறதுக்கு முன்னுதாரணமே எங்க அக்காதாண்டா. குக் வித் கோமாளி சீசன் 1 டைட்டில் வின்னரே எங்க அக்கா தாண்டா… என்று சொல்ல, மற்றொருவர், யார்ரா சும்மா அக்கா அக்கானு சொல்லிக்னு இருக்கற… யார் அந்த பொம்பள… கூட்பிடு அந்த பொம்பளையனு சொல்கிறார்.

கேங்ஸ்டர் மான்ஸ்டராக கையில் துப்பாக்கியுடன் பில்லா அஜித் போல வனிதா வருகிறார். “வந்துட்டேனு சொல்லு… அந்த பிக் பாஸ் வீட்டை விட்டு எப்படி போனேனோ அப்படியே வந்துட்டேனு சொல்லு… ஐ அம் பேக்.. ஐ அம் வெயிட்டிங்” என்று கெத்தாக இண்ட்ரோ தருகிறார்.

பின்னர், வனிதாவின் டான்ஸ் பற்றி கம்மெண்ட் சொன்ன ரம்யா கிருஷ்ணன், “கொஞ்சம் பயந்துட்டேன். மெரட்ற மாதிரி இருந்துச்சு…” என்று சிரித்தார். தொடர்ந்து பேசிய ரம்யா கிருஷ்ணன், “ஆனால், இந்த ஆட்டிட்யூட் புடிச்சிருந்தது. டான்ஸ் இன்னும் கொஞ்சம் இழுத்து இருக்கலாமோனு தோனுச்சு. ஆனால், நான் ரொம்ப அதிகமா டான்ஸ் எதிர்பார்த்தேன்.” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த வனிதா, “ஆமாம். எனக்கு தெரியும். இண்ட்ரோங்கறதால கொஞ்சம் வேறமாதிரி ஒரு காம்போசிஷன், இது என்னுடைய வாழ்க்கையில் ஒரு சிறந்த புரோமோஷன். ஆட்டிட்யூட் முதலில் வரனும் இல்லையா அதுக்காகத்தான்” என்று கூறினார்.

நடிகர் நகு, “பெர்ஃபார்மன்ஸ் நல்லா இருந்தது. எனக்கு புடிச்சிருந்தது” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய வனிதா, “இந்த ஷோ ஒத்துக்கும்போது அடிப்படையா புரிஞ்சுகிட்டது. இது டான்ஸைத் தாண்டி இந்த ஷோ ஜோடிகள் இல்லையா? இப்போ என் ஜோடி எங்கே?” என்று கேட்டு கொதித்துவிட்டார்.

இதற்கு ரம்யா கிருஷ்ணன், “எல்லோரும் ஜோடியா டான்ஸ் பண்ணாங்க… நீங்க மட்டும் சோலோவா கெத்தா வந்தீங்க…” என்று சமாதானம் செய்வது போல பேசினார்.

உடனே குறுக்கிட்ட வனிதா, “அக்கா… சிங்கம் சிங்கிலாதான் வரும் அது வேற விஷயம்…” என்றவுடன் ரம்யாவும் வனிதாவும் சிரித்தனர். “ஆனால், அதை தாண்டி எனக்கு ஜோடி இல்லைனா ஷோ இல்லக்கா” என்று வனிதா ரகளை செய்தார்.

ஈரோடு மகேஷ் குறுக்கிட்டு, “எனக்குத் தெரிஞ்சு இப்ப அக்காவுக்கு ஜோடி கிடையாது. இப்ப லைவ் ஆடிஷன் வச்சு நாம வந்து ஒரு ஜோடிய செலக்ட் பண்றோம்.” என்று சொல்ல, தீனா “லைவ் ஆடிஷன் வந்திருக்கிற அந்த 3 டான்ஸர் வாங்க” என்று கூப்பிட தங்கதுரை, சரத், வினோத் அரங்கத்திற்கு வர எல்லோருமே சிரித்துவிட்டார்கள்.

அதைவிட, சரத், வினோத், தங்கதுரை ஆடிய டான்ஸைப் பார்த்து எல்லோருமே சிரித்துவிட்டார்கள். இவர்களின் காமெடியைப் பார்த்து சிரித்தாலும் கடுப்பான வனிதா, “நான் சீரியஸா கேட்கிறேன். எதுக்கு என்னை இந்த ஷோவுக்கு கூப்டிங்க…” என்று கேட்டுவிட்டார்.

ஈரோடு மகேஷ் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல், “நானும் அதையேதான் கேட்கிறேன். எனக்கு புரியல” என்று கூறுகிறார்.

வனிதா, “இங்க பாருங்க. அட்லீஸ்ட் ஒரு ஜோடிகள் என்று பெயர் வைத்தால் ஜோடியோட கூப்பிடனும் இல்ல. ஜோடி இல்லாம எப்படி?” என்று கேட்க, ஈரோடு மகேஷ், “விஜய் டிவிக்கு வந்து இந்த ஒரு வேளைதான்க்கா நான் பண்ணல. அத பண்றேன்.” என்று கூறுகிறார்.

தீனா, “அக்கா நீங்க ஒன்னும் கவலைப் பாடாதீங்க… அடுத்த வாரம் உங்களுக்கு ஜோடி வந்திருக்கும். நான் பண்ண தப்ப, நீங்க வந்து சரி பண்ணிடுங்க அக்கா… அடிச்சு இவங்கள விரட்டி விட்டுடுங்க…” என்று சாட்டையை கொண்டுவந்து தருகிறார். இதையடுத்து ஆடிஷனுக்கு வந்த 3 பேரும் தெறித்து ஓடுகிறார்கள்.

இதையடுத்து ஈரோடு மகேஷ், “அடுத்த எபிசோடுல, உங்க ஜோடியோடதான் நீங்க ஆடப் போறீங்க… ஜட்ஜஸ் பார்க்கப் போறாங்க… பாராட்டப் போறாங்க… சரியா?” என்று கேட்கிறார். வனிதா ஒரு வழியாக அடுத்த எபிசோடுக்கு ஜோடி உண்டு என்பதை உறுதி செய்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijayakumar get anger for no pair in vijay tv bigg boss jodigal show

Next Story
Pandian Stores: குழப்ப ரேகை; மல்லி பெரிய வில்லியா இருப்பாங்க போல!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com