மீண்டும் கல்யாண வதந்தி… ‘சிங்கிளாக இருப்பதாக’ வனிதா விளக்கம்

Vanitha vijayakumar got married again is rumour news she clarifies: வனிதாவிற்கு நான்காவது முறையாக திருமணம் நடந்துவிட்டதாக தகவல் வெளியானது. வனிதா வட இந்தியாவை சேர்ந்த பைலட் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டதாகவும், அவர்களின் திருமணம் கொல்கத்தாவில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.

நடிகை வனிதா விஜயக்குமாருக்கு மீண்டும் திருமணம் நடந்துவிட்டதாக வெளியான செய்திகளை வனிதா மறுத்துள்ளார்.

நடிகர் விஜயக்குமாரின் மகளான வனிதா, விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் சில திரைப்படங்களில் நடித்தவர், கல்யாணத்திற்கு பிறகு திரைத்துறையை விட்டு விலகி இருந்தார்.

பின்னர் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 மூலம் மீண்டும் திரை வெளிச்சத்திற்கு வந்தார் வனிதா. குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். தற்போது வனிதா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருக்கு கைவசம் 4 படங்கள் உள்ளன.

வனிதாவுக்கு கடந்த வருடம், பீட்டர் பால் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் மிக விரைவிலேயே அந்த மணவாழ்க்கை முறிவுக்கு வந்தது. அதற்கு காரணம் பீட்டரின் குடிப்பழக்கம்.

பீட்டர் பால் வீட்டிற்கு கூட வராமல் குடித்துக் கொண்டே இருப்பதால், அவருடன் இனி சேர்ந்து வாழ முடியாது என முடிவு செய்தார் வனிதா. பீட்டரை நம்பி ஏமாந்து விட்டதாக கண்ணீருடன் கூறினார். ஏற்கனவே இரண்டு முறை திருமண வாழ்க்கை தோல்வி அடைந்த நிலையில், பீட்டர் உடனான இந்த மூன்றாவது திருமணமும் தோல்வியுற்றதால் கவலை அடைந்த வனிதா, இனிமேல் தனது இரு மகள்களுக்காக வாழப்போவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் வனிதாவிற்கு நான்காவது முறையாக திருமணம் நடந்துவிட்டதாக தகவல் வெளியானது. வனிதா வட இந்தியாவை சேர்ந்த பைலட் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டதாகவும், அவர்களின் திருமணம் கொல்கத்தாவில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.

இந்த பைலட், வனிதா தனது மகள்களுடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றபோது உடன் இருந்தவர் என்று கூறப்பட்டது. ஆனால் எதையும் வெளிப்படையாக பேசும் வனிதா, தனக்கு திருமணம் ஆனதை சொல்லாமல் இருப்பாரா என்ற ரசிகர்கள் பேசிக்கொண்டனர்.

இந்த நிலையில், வனிதா தனக்கு திருமணம் நடக்கவில்லை என மறுத்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”நான் சிங்கிளாக, available ஆக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அப்படியே தான் இருக்கிறேன். வதந்திகளை பரப்பவும் வேண்டாம் நம்பவும் வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து வனிதாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அக்கா, வதந்தி பரப்புவர்களை மன்னித்து விடுங்கள், அவர்கள் உங்களை வைத்து விளம்பரம் தேடுகிறார்கள். நாங்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் சிலரோ வனிதா தனது ட்விட்டில் குறிப்பிட்ட available என்ற வார்த்தையை பிடித்துக் கொண்டு, வனிதாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijayakumar got married again is rumour news she clarifies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express