நடிகை வனிதா விஜயகுமார் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தாய்லாந்து சென்றுள்ள நிலையில், அங்கு பஸ் ரெஸ்டாரண்ட்டில் பயணம் செய்தது தொடர்பான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்
தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக சந்திரலோகா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான வனிதா அதன்பிறகு சில படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய அவர், ஒரு கட்டத்தில் திருமணம் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் திரைத்துறையில் ரீ- எண்ட்ரி கொடுத்தார்.
சின்னத்திரையின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமான வனிதா தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் காரணமாக அவருக்கு படவாய்ப்பு குவிந்து வரும நிலையில், பிரஷாந்தின் அந்தகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, தனியாக யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் பேஷன் டிசைன், மேக்கப் ஆர்டிஸ்ட் என பன்முக திறமைகளை வெளிகாட்டி வரும் வனிதா அவ்வப்போது சமூகவலைதளங்களில் புகைப்படங்களை வெளிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரின் பதிவுகளுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
மேலும் சீரியல்கள், படங்கள் என நடிகையாகவும் தொடர்ந்த பிசியாக இருந்து வரும் வனிதா விஜயகுமார் தற்போது தாய்லாந்தில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக இங்கு வந்துள்ளதாக கூறும் வனிதா விஜயகுமார் தற்போது பஸ் ரெஸ்டாரண்டில் பயணம் செய்வது எனக்கு முதல் அனுபவம் என்று கூறியுள்ளார்.

நாம் அனைவரும் பஸ்ஸில் பயணம் செய்து ரெஸ்டாரண்ட்க்கு போயிருப்போம் அல்லது ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டு விட்டு பஸ்ஸில் பயணம் செய்திருப்போம். ஆனால் பஸ் பயணத்திலேயே ரெஸ்டாரண்ட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எனக்கு இதுதான் முதல் அனுபவம் என்று சொல்லும் வனிதா இந்த பஸ்ஸில் பயணம் செய்ய இந்திய பணத்திற்கு 4500 ரூபாய் என்று கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து பஸ்ஸின் உள்ளே சென்ற வனிதாவுக்கு ஊழியர்கள் மரியாதை கொடுத்து உள்ளே அழைத்து செல்கின்றனர். அங்கு சைவம் அசைவ உணவுகளை சாப்பிடும் வனிதா அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் வழியில் அர்த்தநாதேஸ்வரர் கோவில் வருகிறது. பஸ்ஸில் இருந்தபடியே சாமி கும்பிடும் வனிதா பஸ்ஸில் கேட்டும் இசையை பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த இடத்தில் இளையராஜாவை மிஸ் செய்வதாக கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil