scorecardresearch

மகள்களின் கண்களில் அப்படி ஒரு சந்தோஷம்…அன்பு முத்தத்துடன் நடந்த வனிதா விஜயகுமார் திருமணம்!

அம்மாவின் திருமணத்திற்காக நாங்கள் காத்துக் கொணடிருக்கிறோம்

vanitha vijayakumar instagram marriage photos : வனிதா விஜயகுமார் – பீட்டர் பால் திருமணம் இனிதே இன்று நடந்து முடிந்தது. கிறிஸ்துவ முறைப்படி நெருங்கிய நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துக் கொண்டனர். வனிதாவின் இரு மகள்களின் முழு சம்மத்துடனும், அனைவரின் அன்பு வாழ்த்துக்கள் உடனே நடைப்பெற்ற வனிதா-பீட்டர் திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றனர்.

பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு நிறைய பேரின் வாழ்க்கை மாறியது. அதில் சீசன் 3 போட்டியாளர் வனிதா விஜயகுமார் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.

மிகப் பெரிய சினிமா பின்னணி கொண்டவர் என்றாலும் வனிதா மீத ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கிறது.குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் வனிதாவின் பெயர் டேமேஜ் ஆகியது. ஆனால் அந்த அனைத்தையும் பிக் பாஸ் 100 நாட்களில் மாற்றியது.

மற்ற இரண்டு சீசன்கள் முடிவடைந்த உடனே அதுக் குறித்த தாக்கம் பார்வையாளர்களிடம் இருந்து 2 நாட்களில் விலகி விட்டது. ஆனால் இந்த சீசன் அப்படி இல்லை தொடர்ந்து மக்கள் பிக் பாஸ் பற்றியே அதிகம் பேசினர். இதனை பயன்படுத்திக் கொண்ட வனிதா, யூடியூபில் சமையல் நிகழ்ச்சியை தொடங்கினார். கூடவே வனிதா விமர்சகராகவும் அவதாரமெடுத்துள்ளார்.வனிதாவை, விஜயக்குமார் குடும்பத்தினர் யாரும் கண்டுக்கொள்ளவது இல்லை. தனியாகவே தனது மகள்களுக்காக வனிதா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு கலக்கி வருகிறார்

2 பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு தனி ஒரு பெண்மணியாக வனிதா இந்த சமூகத்தில் ஜெயித்து காட்டிக் கொண்டிருப்பது உண்மையில் வரவேற்க வேண்டிய ஒன்று தான். இந்த நேரத்தில் தான் வ்னிதாவின் மறுமணம் குறித்த தகவல் வெளியாகியது. இதுக்குறித்து அவரின் மூத்த மகள் இன்ஸ்டாவில் கூறியிருந்தாவது,

”என் அம்மா எனக்கு அளித்த வாழ்க்கைக்கு நான் உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும். நான் அவளை நிபந்தனையின்றி நேசிக்கிறேன், ஆதரிக்கிறேன். அம்மாவுடன் உட்கார்ந்து பேசுங்கள், அவரை நம்புங்கள். தான் என்ன செய்கிறோம் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்! ….. அவளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். அம்மாவின் திருமணத்திற்காக நாங்கள் காத்துக் கொணடிருக்கிறோம்” என்றார்.

அவரைத்தொடர்ந்து, வனிதாவும் மறுமணம் குறித்து மனம் திறந்திருந்தார். பீட்டர் பால் சினிமா டெக்னிஷியன் என்றும் அவரின் உதவியால் தான் தற்போது யூடியூப் சேனலை நடத்தி வருவதாக கூறினார். தொடர்ந்து, தனது மறுமணம் பற்றி மிகவும் உருக்கமான சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், அறிவிப்பின் படி, வனிதா- பீட்டர் பால் திருமணம் கிறிஸ்துவ முறைப்படி நடந்து முடிந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் இந்தத் திருமணம் வீட்டிலேயே நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vanitha vijayakumar instagram marriage photos vanitha vijayakumar peter paul marriage photos vanitha vijayakumar marriage live