நீயா நானா கோபிநாத், வனிதா விஜயகுமார்… செம்ம காம்பினேஷனில் புதிய படம் அறிவிப்பு

Vanitha vijayakumar joins with Neeya naana gopinath new movie: பென்சில் பட இயக்குனரின் அடுத்த படம்; முக்கிய கதாப்பாத்திரங்களில் கோபிநாத், வனிதா விஜயக்குமார், அனிகா

விஜய் டிவி நீயா நானா கோபிநாத் நடிக்கும் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் வனிதா விஜயக்குமார்.

ஜீ.வி. பிரகாஷை வைத்து பென்சில் படத்தை இயக்கிய மணி நாகராஜ், தற்போது வாசுவின் கர்ப்பிணிகள் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். இவர் நடிகர் விஜய்யின் மாமா ஆவார். மேலும் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் இவரே. ஒரு டாக்டர் மற்றும் 4 கர்ப்பிணிப் பெண்களைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமான டாக்டர் கேரக்டரில் நீயா நானா புகழ் கோபிநாத் நடிக்கிறார். மலையாள நடிகை லீனாகுமார் கோபிநாத் இன் மனைவியாக நடிக்கிறார்.

இந்த படத்தில் 4 முக்கிய கதாப்பாத்திரங்களில், அனிகா, சீதா, வனிதா விஜயக்குமார் மற்றும் புதுமுக நடிகை க்ரிஷிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த நான்கு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதை என்று கூறும் இயக்குனர் மணி நாகராஜ், 4 பேருமே அவர்களது பகுதியில் ஹீரோயின்கள் தான் என்று கூறியுள்ளார்.

16 வயது முதல் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டதுதான் இந்தப்படத்தின் கதை. படத்தின் கதை பிடித்து போனதால், தயாரிப்பாளர் தனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார் என்றும், இன்னும் ஒரு ஷெட்யூல் தான் எடுக்க வேண்டியுள்ளது என்றும், அடுத்த வார இறுதியில் படபிடிப்பு தொடங்கும் என்றும் இயக்குனர் மணி நாகராஜ் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவமனை மற்றும் பெண்களைச் சார்ந்த கதை என்பதால், சென்னையிலே படப்பிடிப்பு முழுவதும் நடந்து வருகிறது. விஷ்ணு மோகன் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை வனிதா பெண்களை மையப்படுத்திய இந்த படத்தில் நடித்து வருவதற்கு, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijayakumar joins with neeya naana gopinath new movie

Next Story
குழந்தைகளுடன் ஒரே வீட்டில் பாரதி- கண்ணம்மா: இது எப்போ?Vijay TV serial tamil news: bharathi kannamma serial’s next episode pic goes viral
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express