’என்னோட வாழ்க்கைல ஒரு அத்தியாயம் தான்’ : வனிதா-கஸ்தூரி ட்விட்டர் சண்டை

“எனக்கு வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் மட்டும்தான் உள்ளது என்பதை வனிதா உணர வேண்டும்.”

“எனக்கு வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் மட்டும்தான் உள்ளது என்பதை வனிதா உணர வேண்டும்.”

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanitha Vijayakumar fight with Kasthuri

கடந்த பிக் பாஸில் வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் தமிழ் புகழ் வனிதா விஜயகுமார் சமீபத்தில் திரைப்படத் டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலுடனான அவரது மூன்றாவது திருமணம் தலைப்புச் செய்தியானது. தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் வனிதா குறித்து விமர்சனங்களை முன் வைத்தனர்.

Advertisment

’பிரபலங்களுக்கென ஒரு கண்ணியம் உண்டு’ – என்ன சொல்கிறார்கள் நெட்டிசன்கள்?

லட்சுமி ராமகிருஷ்ணனுக்குப் பிறகு, சமீபத்தில் ட்விட்டரில் கஸ்தூரியுடன் கடும் சண்டையில் இறங்கினார் வனிதா. சோஷியல் மீடியாவில் லட்சுமியை ஆதரித்த கஸ்தூரி, "என் இதயத்தில் உங்களுக்காக ரத்தம் கசிகிறது. தயவு செய்து மலிவான குழாயடி சண்டை போடும் மக்களுடன் தொடர்பில் ஈடுபட வேண்டாம். நீங்கள் உண்மையிலேயே இதை மிகவும் மோசமாக செய்கிறீர்கள் வனிதா” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment
Advertisements

அவர் மேலும், "சட்டபூர்வமான நிலைப்பாடு - நயவஞ்சக வனிதா இணைய துஷ்பிரயோகம் செய்து ஒரு பெண்ணை தாக்கி அவதூறு செய்கிறார். தன்னைத் துஷ்பிரயோகம் செய்ததற்காக சூர்யா தேவி மீது போலீஸில் புகார் அளித்தார். மேடம் லட்சுமி ராமகிருஷ்ணன் மீது அவர் அதே குற்றத்தைச் செய்துள்ளார். அவரை கைது செய்ய முடியும்" என்றார்.

“எனது சொந்த வாழ்க்கையில் தலையிட முயன்றால் உங்கள் வாழ்க்கை பற்றி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன்” என்றார். இதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி, “எனக்கு வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் மட்டும்தான் உள்ளது என்பதை வனிதா உணர வேண்டும். எனது சொந்த வாழ்க்கையை பேசுவதில் பயனில்லை. உங்களைப்போல் சீசன் 1.2.3 போன்ற மெகா சீரியல் வாழ்க்கை எனக்கு இல்லை. நீங்கள் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர். உங்களை பிரபலபடுத்த என்னை பயன்படுத்த வேண்டாம்”என்றார். இதையடுத்து வனிதா, “எனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து கஸ்தூரியை பிளாக் செய்கிறேன். காமெடி பீஸ்” என்றார்.

விமான பணிப்பெண் டூ சூரி ஜோடி… பிக் பாஸ் ரேஷ்மா அழகோ அழகு!

இப்படி இருவரின் சண்டையும் ட்விட்டரில் தொடர்ந்தது. பின்னர் தனது ட்வீட்களை நீக்கி விட்டார் வனிதா.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: