Bigg Boss Tamil 3: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது. அந்த சமயத்தில் ஆசிரியராக இருந்த கஸ்தூரி, வனிதாவை வாத்து என்று கூறியது, சண்டையாக வெடித்தது. இந்த விவகாரம் கமல்ஹாசன் முன்பு பஞ்சாயத்திற்கும் வந்தது.
அதன் பிறகு எப்போதுமே வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் இடையே எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. இவர்கள் இருவருமே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாலும், இவர்களின் பிரச்சனை மட்டும் இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் லாஸ்லியாவுக்கு ஆதரவாக ட்வீட் ஒன்றைப் போட்டிருந்தார் வனிதா.
அதற்கு 'என்ன தான் லாஸ்லியா வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாகப் பழி போடுவது? விட்டுருங்கம்மா' என்று கூறி வாத்து எமோஜியையும் சேர்த்திருந்தார் கஸ்தூரி.
கஸ்தூரியின் இந்த ட்வீட்டை நெட்டிசன் ஒருவர் வனிதாவை டேக் செய்து அவருக்கு பதிலடி தர வேண்டும் என்றார். அதைப் பார்த்த வனிதா, 'உனக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால் உன்னைப் பற்றி குறிப்பிட இணையத்தில் ஒரு எமோஜி கூட இல்லை. அதனால் அந்த இடத்தை வெறுமையாக விடுகிறேன்' என்றார்.
இதற்கு பதிலளித்த கஸ்தூரி, 'அன்பான வனிதா. உன்னை போல் வார்த்தைகளைப் பயன்படுத்த இந்த இணையத்தாலேயே முடியவில்லை. இந்த வார்த்தை போரில் ஜெயித்துவிட்டதாக நினைத்து உனக்காக நீயே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்' என்று விடாமல் தனது ட்விட்டர் போரை நடத்திக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், வீட்டில் தான் சண்டைப் போட்டுக் கொண்டீர்கள், இங்காவது அமைதியாக இருங்கள் என அட்வைஸ் செய்தனர்.