வனிதாவுக்கு எதிராக லட்சுமி- கஸ்தூரி கூட்டணி

பலரையும் காயப்படுத்தி வரும் போக்கை  வனிதா மாற்றி கொண்டால், அவருக்கு உதவ தயாராக உள்ளேன் என்று நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

By: July 26, 2020, 9:34:59 PM

பலரையும் காயப்படுத்தி வரும் போக்கை  வனிதா மாற்றி கொண்டால், அவருக்கு உதவ தயாராக உள்ளேன் என்று நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

முன்னதாக, நடிகை வனிதாவுக்கு எதிராகவும்,    லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதராகவும் பொதுமக்கள் கருத்து கேட்கும் வீடியோவை பகிர்ந்த கஸ்தூரி, ” இப்பிடியே போனா அநேகமாக வனிதா மேடம் இன்னும் 8கோடி போலீஸ் கேஸ் குடுக்கணும் போலியே” என்று தெரிவித்தார்.

 

 

 

இதனைத் தொடர்ந்து ,” வனிதாவும் நீங்கள் , ஒரு காலத்தில் நீங்களும், வனிதாவும் நண்பர்கள் தானே” சமூக வலைதளவாசி ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு, பதிலளித்த கஸ்தூரி, ” நட்பு இல்லை. நான் பார்த்து வளர்ந்த பெண். இப்பவும் எனக்கு எந்த பகையோ காழ்புணர்ச்சியோ எதுவுமே இல்லை. பொதுவெளியில் வனிதா அவர்கள் மிகவும் கொச்சையாக பேசி பலரையும் காயப்படுத்தி வருகிறார். அந்த போக்கை மாற்றி கொண்டால் இப்போதும் உதவ தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.

 

 

 

நடிகை வனிதா விஜயகுமார் சில வாரங்களுக்கு முன் சினிமா டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசெபத், பீட்டர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், இன்னும் முறைப்படி விவகாரத்து பெறவில்லை எனவும் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

பின்னர் இந்த விவாகரம் குறித்து பிரபல நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் . இதற்கு, வனிதா ட்விட்டரில் காரசாரமாக பதில் சொல்லியிருந்தார்.

இது போதாதென்று, பிரபல யூ டியூப்யூ டியூப் சேனலான பிகைண்ட்வுட்ஸ் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் இருவரையும் லைவில் வரவழைத்து உரையாட செய்தனர். சில மணி நேரங்களிலேயே உரையாடல் பெரிய சண்டையாக உருவெடுத்தது.

இந்த நேரத்தில் தான் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி வனிதாவுடன் கடும் சண்டையில் இறங்கினார். தனது ட்விட்டர் பக்கத்தில்,“என் இதயத்தில் உங்களுக்காக (லட்சுமி ராமகிருஷ்ணனுக்காக) ரத்தம் கசிகிறது. தயவு செய்து மலிவான குழாயடி சண்டை போடும் மக்களுடன் தொடர்பில் ஈடுபட வேண்டாம். நீங்கள் உண்மையிலேயே இதை மிகவும் மோசமாக செய்கிறீர்கள் வனிதா” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நடிகை வனிதா விஜயகுமார், தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை பரப்புவதாக லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, ஆகியோர் மீது வடபழனி காவல் நிலையத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.

 

 

இதற்கிடையே, வனிதா விஜயகுமார் – பீட்டர் பால் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு   செய்ததினால் கைது செய்யப்பட்ட  சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

 

 

தனது திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனிதா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vanitha vijayakumar kasturi surya devi corona positive vanitha lakshmi ramakrishnan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X