’பிரபலங்களுக்கென ஒரு கண்ணியம் உண்டு’ - என்ன சொல்கிறார்கள் நெட்டிசன்கள்?

வனிதா விஜயகுமார், லட்சுமி ராமகிருஷ்ணன் சண்டை குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

வனிதா விஜயகுமார், லட்சுமி ராமகிருஷ்ணன் சண்டை குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lakshmy ramakrishnan sends Legal notice to Vanitha Vijayakumar

லட்சுமி ராமகிருஷ்ணன் - வனிதா விஜயகுமார்

Vanitha Vijayakumar: நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் கடந்த மாதம் 27-ம் தேதி சினிமா டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக நெருங்கிய நண்பர்கள் கலந்துக் கொண்ட அந்தத் திருமணம் வனிதாவின் இல்லத்திலேயே நடந்தது.

Advertisment

அவர்களின் திருமணத்துக்கு அடுத்த நாள், தன்னை விவாகரத்து செய்யாமல் மறுமணம் செய்துக் கொண்டதாக, பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல்துறையில் புகாரளித்தார். பின்னர் இதைப் பற்றி அனைவரும் பேசத் தொடங்கினர். அதற்கு ட்விட்டரில் தக்க பதிலடி கொடுத்து வந்தார் வனிதா. இதற்கிடையே நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனும், வனிதாவும் ஒரு இணையதள ஊடகத்தில் நேரடியாக பேசினார்கள். அப்போது இருவருக்கும் சண்டை முற்றியது. அந்த வீடியோ இணையத்திலும் வைரலானது.

வனிதா விஜயகுமார், லட்சுமி ராமகிருஷ்ணன் சண்டை குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

Advertisment
Advertisements

எல்லோரும் கத்துவதாக வனிதாவை குற்றம் சாட்டுகிறார்கள். நான் பார்க்கும் போது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தான் சண்டையைத் தொடங்கினார். லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சொல்வதெல்லம் உண்மை வகையை மற்றொரு நடிகையின் வாழ்க்கையுடன் நிரூபிக்க விரும்புகிறாரா? முரண்!

இந்த உரையாடலில் நீங்கள் பேசியது சரியானது வனிதா மேடம்.

Nobody has the right to meddle in between wife and husband. I think Vanitha has given a befitting reply to all. It’s her choice to marry the person she likes. #VanithaVijayakumar

— Baahubali (@Baaahubali) July 20, 2020

நடிகர் சங்கம் வனிதா விஜயகுமாரை திரைத்துறையிலிருந்து தூக்கி எறிய வேண்டும்... அவர் மரியாதை மற்றும் ஒரு பிரபலமான வாழ்க்கைக்கு தகுதியற்றவர்... பிரபலங்களுக்கு ஒரு கண்ணியம் உண்டு... தன்மை இல்லாததற்கு ஒரு உதாரணம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: