நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் செய்துகொண்ட பீட்டர் பால் அவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில், வனிதா, அன்பாக இருப்பதுதான் நம்மை மனிதனாக்குகிறது நாம் போகும்போது ஒன்றும் கொண்டுசெல்வதில்லை; நாம் ஏன் அன்பை பரப்பக் கூடாது என்று ட்வீட் செய்துள்ளார். வனிதாவின் இந்த ட்வீட்டை வைத்து அவர் மீண்டும் பீட்டர் பால் உடன் சேர்ந்து வாழப்போகிறாரா என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
நடிகை வனிதா விஜயகுமார், ஏற்கெனவே 2 முறை திருமணமாகி விவாகாத்து பெற்றவர். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த சூழலிதான் அவர், கொரோனா பொதுமுடக்க காலத்தில், சினிமா தொழில்நுட்ப பிரிவு துறையைச் சேர்ந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே வனிதாவை திருமணம் செய்ததாக முதல் மனைவி எலிசபேத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வனிதாவின் மூன்றாவது திருமணம் சர்ச்சையானது. சில நாட்களில் சர்ச்சைகள் ஓய்ந்து சுமூகமாக சென்றுகொண்டிருந்த வனிதா - பீட்டர் பால் வாழ்க்கையில், மீண்டும் பிரச்னை ஆரம்பமானது.
வனிதா தனது 40வது பிறந்தநாளை கொண்டாட கோவாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தபோது பீட்டர் பால் மது குடித்துவிட்டு வனிதாவுடன் பிரச்னையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சென்னை வந்த பீட்டர் பால், வனிதாவை பார்க்காமல் எப்போதும் குடித்துக்கொண்டிருந்ததாக வனிதா கூறினார்.
இது குறித்து வனிதா, தான் திருமண வாழ்க்கை மீது நம்பிக்கை வைத்ததால்தான் பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டேன். அவர் பிரிந்து சென்றாலும் அதிசயம் நடக்கும் என்று நம்புகிறேன் என வனிதா தெரிவித்தார்.
இந்த நிலையில், வனிதாவின் லவ் ட்வீட் நெட்டிசன்களுக்கு அவலாக மாறியுள்ளது. அப்படி என்ன வனிதா ட்வீட் செய்துள்ளார் என்றால், “அன்பாக இருப்பது மட்டும் தான் நம்மை மனிதனாக்குகிறது. தேவைப்படும்போது கோபப்படுவது சரி. அந்த கோபமும்கூட நம்மை மனிதனாக்குகிறது. ஆனால், கருணையுடன் இருப்பது ஒரு உயிரை காப்பாற்றும் எனில் நாம் ஏன் அன்பை பரப்பக் கூடாது. அன்பாக இருக்கக் கூடாது. வாழ்க்கை குறுகியது. நாம் போகும்போது எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. அதனால், அன்பாக இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
வனிதாவின் இந்த ட்வீட்டை வைத்து, பிரிந்து சென்ற பீட்டர் பாலை மீண்டும் ஏற்றுக்கொள்வது பற்றிதான் சூசகமாக தெரிவித்துள்ளார் என்று நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"