நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள்தான் வனிதா விஜயகுமார். தந்தை விஜயகுமார் மற்றும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனது மகள்களுடன் தனியாக வாழ்ந்துவந்தார். இந்த நிலையில் வனிதாவிற்கு பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், தொடர்ச்சியாக அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், அவர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் இணைந்து ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இந்த படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. படம் குறித்த அப்டேட்டுகளை அவ்வபோது வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரெய்லர் 25-ம் தேதி வெளியாகும் என்றும், படத்தின் டெலிவரி ஜூன் என்றும் வனிதா போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்து உள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/images/01jw06xk89pckfam8w6qtqv6xf/vanitha-vijayakumar-mr-and-mrs-movie-trailer-release-date-1748058950921-451096.jpg)
அவர் பகிர்ந்துள்ள போஸ்டரில், அவர் கர்ப்பமாக இருப்பது போலவும், அவரது வயிற்றை ராபர்ட் முத்தமிடுவது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் வனிதா மற்றும் ராபர்ட்டுடன் இணைந்து ஸ்ரீமன், ஷகிலா, செஃப் தாமு, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வனிதா மீண்டும் திரைத்துறை பக்கம் திரும்பி உள்ளார். அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.