Bigg Boss Vijayakumar 3rd marriage with peter paul
Vanitha Vijayakumar: கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் முகென் டைட்டிலை வென்றார். இருப்பினும் இந்நிகழ்ச்சியில் பெரிதாக பேசப்பட்டவர், நடிகை வனிதா விஜயக்குமார்.
Advertisment
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சில வாரங்களிலேயே வனிதாவை வெளியேற்றியது விஜய் டிவி. அதன் பின் பிக் பாஸில் சுவாரஸ்யம் இல்லை என்ற காரணத்தால், மீண்டும் வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டு வந்தார்கள். அவரும் இறுதிக்கட்டம் வரை சலிக்காமல் கண்டெண்ட் கொடுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பி எறியதற்கு வனிதாவும் ஓர் முக்கிய காரணமாக இருந்து வந்தார். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குடும்பத் தொடரான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் வனிதா நடிக்கப்போவதாக சில நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் தொலைக்காட்சியில் பல மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
இதற்கிடையே இந்த சீரியலில் வனிதாவை நடிக்க வைத்தால், சீரியலின் டி.ஆர்.பி இன்னும் உயரும் என எண்ணுகிறதாம், சானல் தரப்பு. ஆகையால் எப்படியும் வனிதாவுக்கு வில்லி கதாபாத்திரம் தான் தருவார்கள் என்பது தெளிவாகிறது. அதுமட்டுமல்ல, சந்திரலேகா என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான வனிதா, ‘சந்திரலேகா’ என்ற சீரியலில் நடிக்கவிருக்கிறாராம். அதுவும் வனிதா விஜயக்குமாராகவே! இந்த செய்தி வனிதா ரசிகர்களை குஷிப்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.