Vanitha Vijayakumar: திருமண வாழ்க்கையில் பல கடினமான தருணங்களை கடந்து வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பாலை திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து, பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
தனது கணவர் குடிக்கு அடிமையானவர் என்றும், பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் இணைய ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தார் எலிசபெத் ஹெலன். இதையடுத்து வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் குறித்த, சர்ச்சைகள் இணையத்தில் வெடித்தன. இந்நிலையில், பீட்டர் பால் மற்றும் தனது குழந்தைகளுடன் கோவா சென்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் வனிதா. அங்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனது கணவரை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து இணையத்தில் பல்வேறு விதத்தில் செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில் நேற்று தனது இன்ஸ்டாகிராமில், “நான் எதையும் மறைக்கவும் இல்லை. என் குழந்தைகளுக்கும், வேலைக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல், பிரச்னைகளை திடமாக நின்று எதிர்கொண்டு வருகிறேன். என் வாழ்க்கையில் பிரச்னைகள் ஒன்றும் புதிதல்ல. வாழ்க்கை ஒரு பாடம். அதில் நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன். நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், பொய் செய்திகளை படித்துவிட்டு ஏதாவது ஒரு கதையைக் கட்டிக் கொண்டிருக்காதீர்கள். நான் எதையும் தவறாக செய்துவிடவில்லை. அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு நான் அன்பு செலுத்தினேன். தற்போது, என் கனவுகளும், நம்பிக்கைகளும் நொறுங்கிய நிலையில் நிற்கிறேன். இதுவும் கடந்துபோகும் என்று நம்புகிறேன். நான் யாரிடமும் எதையும் விளக்க வேண்டிய அவசியமில்லை. என் கணவர் மீது குறை சொல்லி அதன்மூலம் ஆதாயம் தேட முயற்சிக்க மாட்டேன். நான் முதிர்ச்சியடைந்திருக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
Advertisment
Advertisements
இந்நிலையில் தற்போது தனது யூ-ட்யூப் சேனலில் பிரச்னைகளை விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பீட்டர் பால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாரடைப்பு வந்ததால், நான் பேரதிர்ச்சி அடைந்தேன். அதிர்ஷ்டவசமாக காப்பாற்றினேன். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்துவிட்டோம். மீண்டும் சிறிது நாளில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனக்கு ஒரு துணை வேண்டும் என்று உங்களை திருமணம் செய்தேனே தவிர, உங்கள் இறப்பை காண அல்ல என்று அவரிடம் பேசினேன். அவரிடம் சொல்லி விட்டே, அவரை ட்ராக் செய்து, கையும் களவுமாக பிடித்தேன். அவர் சிகரெட்டுக்கு அடிமையாகியிருந்ததால், அதை விட வற்புறுத்தினேன். அதன் பிறகுதான் கோவா சென்றோம்.
பீட்டரின் சகோதரருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட செய்தி வந்ததால், அதை காரணம் காட்டி மது குடித்தார். இந்த பழக்கம் எத்தனை நாளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது என்று தெரியவில்லை. இதனால் எங்கள் இருவருக்கும் சண்டை வந்தது. ஏற்கெனவே பலவீனமாக உள்ள அவர் குடித்திருப்பது எனக்கு கவலை அளித்தது. சரி. எப்படியோ வீட்டுக்கு வந்துவிட்டோம். அன்றையிலிருந்து ஒருவாரம் தொடர்ந்து குடித்துள்ளார்.
மீண்டும் மீண்டும் கூட்டி வந்துவிட்டால். குடிக்க ஓடிவிடுவார். இன்னமும் போன் ஸ்விட்ச் ஆப்லேயே வைத்துள்ளார். அவர் எங்கிருக்கார் என்று தெரியவில்லை.
போதை பழக்கம்தான் அவருக்கு அதிகம் உள்ளதால், எனக்கு கவலை அளிக்கிறது.
என் சொந்த பணத்தில்தான் என் குழந்தைகளையும், பீட்டர்பாலையும் காப்பாத்திட்டுருக்கேன். என் வாழ்நாளில் நான் ஏமாந்தது அன்பினால்தான். குடிப்போதையால பீட்டர் பால் ரொம்ப தப்பு பண்றாரு. ஏமாந்துட்டேன்... தோற்றுவிட்டேன்.. காதல், திருமணம் எனக்கு அமையவில்லை” என கண்ணீர் மல்க பேசியுள்ளார் வனிதா. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”