vanitha vijayakumar, actress vanitha vijayakumar, vanitha vijayakumar marriage, வனிதா விஜயகுமார், வனிதா விஜயகுமார் திருமணம், vanitha vijayakumar marriage controversy, vanitha vijayakumar interview, pieter paul, vanitha vijayakumar married pieter paul
Vanitha Vijayakumar: கடந்த ஒரு வாரமாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான பேசு பொருளாக மாறியிருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார். தமது வாழ்க்கையை, தங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்ற எண்ணம் மனிதர்கள் எல்லோருக்குள்ளும் இருக்கும். அதைப்பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற எண்ணமும் நிச்சயம் இருக்கும். ஆனால் மற்றவர்கள் வாழ்க்கையைப் பற்றி நம்மில் பெரும்பாலானோர் அப்படி நினைப்பதில்லை.
நடிகர் ஆகாஷுடன் தனக்கு மிக இளம் வயதிலேயே திருமணமானதாகவும், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரிடம் இருந்து முறையாக விவாகரத்துப் பெற்று பிரிந்ததாகவும், கடந்த வருடம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் வனிதா. இந்தத் திருமணத்தில் வனிதாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தார்கள். தற்போது மகள் வனிதாவிடமும், மகன் அவரது முன்னாள் கணவரிடமும் வளர்கிறார்கள்.
ஒரு பெண் தன் கணவனை இழந்த பின்போ அல்லது முதல் திருமண முறிவிற்குப் பிறகு இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது அவளது தனிப்பட்ட விருப்பம். இதைப் பற்றி வெளியாட்கள் கருத்து சொல்ல எதுவுமில்லை. அதன்படி தொழிலதிபர் ஆனந்த் ஜெயராஜனை மறுமணம் செய்துக் கொண்டார் வனிதா. இருப்பினும் இந்த வாழ்க்கையும் வனிதாவுக்கு இனிக்கவில்லை. அதனால் இதிலும் முறையாக விவாகரத்து பெற்று, பெரும் போராட்டத்திற்குப் பிறகு மகளையும் மீட்டெடுத்தார்.
Advertisment
Advertisements
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி, சின்னக் குழந்தைகளுக்கும் வனிதாவை அறிமுகப்படுத்தியது. பொதுவாக பல துரோகங்களை, ஏமாற்றங்களை, ஏக்கங்களை சந்தித்த பெண்களின் மனது வெளியில் இரும்பு போல் கடினமாகவும், உள்ளே பூ போல் மென்மையாகவும் இருக்கும். சத்தமாக பேசுகிறார், கோபமாகிறார், சண்டைப் போடுகிறார் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலர் வனிதாவை எதிர்மறையாக நினைத்திருக்கலாம்.
ஆனால் இந்த குணங்கள் அனைத்தும் எல்லோரிடத்திலும் இருப்பது தான். அதை வெளிக்காட்ட நாம் பிக் பாஸுக்கு போகவில்லை என்பது தான் வித்தியாசம். தனது ’யம்மி’யான சமையலால், ஏற்கனவே ரசிகர்களால் கவனிக்கப்பட்ட வனிதா, அடுத்ததாக அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை இன்னும் கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் தனது முழு திறமையையும் வெளிக்கொணர்ந்து, தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
2 பெண் குழந்தைகளுடன் தனியே வசித்து வரும் வனிதா கடந்த வாரம் பீட்டர் பால் என்பவரை மறுமணம் செய்துக் கொண்டார். அதற்கு வனிதாவின் மகள்களும் முழு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இதை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் எத்தனை கேள்வி வேண்டுமானாலும் எழுப்பலாம். ஆனால், கேள்வி எழுப்ப நமக்கு என்ன உரிமை இருக்கிறது? என தங்கள் மனதுக்குள் நினைத்துக் கொண்டால் நலம். நம் வாழ்க்கையைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என நினைக்கும் நாம் தான் அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து நீதிபதியாகிறோம். இது அவர்களுடைய வாழ்க்கை, அதில் நன்மையோ, தீமையோ அதற்கு அவர்கள் தான் முழுப் பொறுப்பு. நாம் ஏன் தேவையில்லாமல் நீதிமான்களாக வேண்டும்?
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”