”எந்த டிராமா குரூப்பும், எந்த சட்டமும்….” வைரலாகும் வனிதா விஜயகுமார் பதிவு

தனது குழந்தைகளுடன் கணவர் பீட்டரின் படங்களை வெளியிடுவதில் தற்போது மும்முரமாக உள்ளார்.

By: Updated: July 8, 2020, 01:24:29 PM

Vanitha Vijayakumar: சமீபத்தில், வனிதா விஜயகுமார் திரைப்பட டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை அவரது இல்லத்தில் திருமணம் செய்து கொண்டார். பொது முடக்கம் அமலில் இருப்பதால், முக்கிய நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மட்டும் அந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.  இதற்கிடையே பீட்டர் பாலின் முன்னாள் மனைவி எலிசபெத் ஹெலன், பீட்டர் இன்னும் தன்னை விவாகரத்து செய்யவில்லை என்றும், அவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும், தனக்கும் தன் குழந்தைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும் காவல்துறையில் புகார் அளித்தார்.

ஷாலினியிடம் கோபப்பட்ட அஜித்: பிரித்விராஜ் சுவாரஸ்ய தகவல்

 

View this post on Instagram

 

To all those who never had a real dad…

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

திரைப்படத் துறையைச் சேர்ந்த மூத்த சக நடிகர்களை தனது விரைவான பதிலால் மெளனமாக்கிய வனிதா, தன்னைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் அக்கறை காட்டி வந்தார். பிக் பாஸ் தமிழ் பங்கேற்பாளரான இவர்,  தனது குழந்தைகளுடன் கணவர் பீட்டரின் படங்களை வெளியிடுவதில் தற்போது மும்முரமாக உள்ளார். தனது இளைய மகளுடன் மனதைக் கவரும் தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்ட அவர்,  “ஒருபோதும் உண்மையான அப்பாவைப் பெறாத அனைவருக்கும் …” என்று குறிப்பிட்டார். அதோடு, “உயிரியல் தந்தை வேறு… அப்பா வேறு.. அப்பா அம்மா போன்றவர்.. அம்மா தான் எல்லாம்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

கேரள அரசியலை ஆட்டம் காண வைக்கும் தங்க கடத்தல் வழக்கு… யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?

ஆதோடு பூட்டு, சாவி வடிவமைப்போடு ஒரு ஜோடி தங்க மோதிரங்களையும் அவர் பகிர்ந்துக் கொண்டார். “இறுதியாக மோதிரங்கள் வந்தன… பதிவுசெய்யப்பட்ட உண்மையான திருமணத்திற்காக அடையாளம். புரிந்து கொள்ளாத அனைவருக்கும் அல்லது ஒருபோதும் மாட்டேன் என்கிறவர்களுக்கும், இது என் சோல்மேட், கடவுள் அனுப்பியவர். சிறந்த நண்பர்கள் நாங்கள் என்றென்றும் காதலிக்கிறோம், எங்கள் கடைசி மூச்சு வரை தொடரும். எந்த சட்டமும் அல்லது நாடக குழுக்களும் ஒரு …. முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vanitha vijayakumar peter paul wedding ring photos goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X