Advertisment

சீரியல் நடிகருடன் வனிதா விஜயகுமார்: இதற்கெல்லாம் வதந்தி பரப்பாதீங்கப்பா..!

பிரபல டிவி சீரியல் நடிகருடன் நடிகை வனிதா விஜயகுமார் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் கிசுகிசுக்களையும் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இதற்கு வனிதாவின் ரசிகர்கள், ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டது ஒரு குத்தமா? இதற்கெல்லாம் வதந்தி பரப்பாதீங்கப்பா என்று கூறி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
vanitha vijayakumar, வனிதா விஜயகுமார், டிவி சீரியல் நடிகர் அரவிந்த், vanitha vijayakumar photo with tv serial actor aravind, வனிதா - அரவிந்த் புகைப்படம், tv serial actor aravind, netizens gossip comments

பிரபல டிவி சீரியல் நடிகருடன் நடிகை வனிதா விஜயகுமார் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் கிசுகிசுக்களையும் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இதனைப் பார்த்த சிலர், ஒரு புகைப்படத்த வைத்து இப்படி வதந்தி பரப்பாதீர்கள் என்று வனிதாவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

Advertisment

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதில் இருந்து தொடர்ந்து அவருடைய பெயர் சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. நடிகை வனிதா விஜயகுமார் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார். அதற்கு பிறகு, பட வாய்ப்புகள் இல்லாததால் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதே நேரத்தில், வனிதாவின் தனிப்பட்ட திருமண வாழ்க்கை எல்லாமே முறிவில்தான் முடிந்தது. வனிதா விஜயகுமார் ஏற்கெனவே, 3 பேரை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து ஆனது எல்லோருக்கும் தெரிந்ததுதான். வனிதாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களை தனி மனுஷியாக வளர்த்து வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பின், வனிதா விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். தொடர்ந்து, டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அதே நேரத்தில், ஹரி நாடார் உடன் 2கே அழகானது காதல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த சூழ்நிலையில்தான், சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றி பெற்ற தெய்வமள் சீரியலில் ஹீரோவுக்கு 2வது அண்ணனாக நடித்த நடிகர் அரவிந்த் உடன் வனிதா விஜயகுமார் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், வனிதா - அரவிந்த் இருவரையும் தொடர்புபடுத்தி கிச்சுக்களையும் வதந்திகளையும் பரப்பை வருகின்றனர். சில நெட்டிசன்கள் வனிதாவின் 5வது கணவர் என்று மோசமாக வதந்தி பரப்பி வருகின்றனர். அதிலும், சில நெட்டிசன்கள், வனிதாவின் ரசிகர்கள், வனிதா விஜயகுமார் ஒரு நடிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது ஒரு குத்தமா? இதற்கெல்லாம் வதந்தி பரப்பாதீங்கப்பா என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வனிதாவுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டதற்காக இந்த நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் இப்படி வதந்தி பரப்புவதை அறிந்த நடிகர் அரவிந்த் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். நடிகர் அரவிந்த் தற்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் வீட்டோடு மாப்பிள்ளையாக நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வனிதா விஜயகுமார் பற்றி ஊர்க்கதையை மெல்லும் வெட்டி நெட்டிசன்கள் என்ன பேசினாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் தனது பணியில் பிஸியாகா இருக்கிறார். தனது புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Vanitha Vijayakumar Vanitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment