லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்ட 4 பேர் மீது வனிதா போலீஸில் புகார்; சூர்யா தேவி கைது
நடிகை வனிதா விஜயகுமார், நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மற்றும் நடிகர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், வனிதா மீது அவதூறு பரப்பியதாக சூர்யா தேவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை வனிதா திருமணம் சர்ச்சைகள் எழுந்த நிலையில், வனிதா விஜயகுமார், நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மற்றும் நடிகர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், வனிதா மீது அவதூறு பரப்பியதாக சூர்யா தேவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisment
நடிகை வனிதா விஜயகுமார், சினிமா தொழில்நுட்ப கலைஞர் பீட்டர் பால் என்பவரை அண்மையில் திருமணம் செய்துகொண்டார். பீட்டர் பால், முதல் மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்தாலும் அவரை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டார் என்று கூறி சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில் நடிகை வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பேசிய விவகாரம் மேலும் சர்ச்சையானது.
இந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார், தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை பரப்புவதாக நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நடிகர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது வடபழனி காவல் நிலையத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
அதே போல, முன்னதாக, நடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம் பற்றி பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்தனர். இதில், சூர்யா தேவி என்ற பெண் தனது திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனிதா விஜயகுமார் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக இருவரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, நடிகை வனிதா விஜயகுமார், சமூக வலைதளத்தில் சூர்யா தேவி தன்னைப் பற்றி அவதூறாக பதிவிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், சூர்யா தேவி ஏற்கெனவே பதிவிட்ட வீடியோக்களை அழிக்காமல் இருந்ததோடு, மேலும் புதிது புதிதாக வனிதா தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வந்ததால் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சூர்யா தேவியை கைது செய்துள்ளனர்.
நடிகை வனிதா விஜயகுமார் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை பரப்புவதாக நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நடிகர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்த நிலையில், முன்னதாக, வனிதா அளித்த புகாரின் பேரில், சூர்யா தேவி என்ற பெண் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"