மீண்டும் முட்டிக்கொள்ளும் வனிதா – லட்சுமி ராமகிருஷ்ணன் : இதற்கு முடிவே இல்லையா?

Vanitha vijayakumar reply to Lakshmi ramakrishnan comments: வனிதா பவர் ஸ்டாருடன் திருமண கோலத்தில் நிற்கும் புகைப்படத்தை கமெண்ட் செய்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்; பதிலடி கொடுத்த வனிதா

நடிகை வனிதா விஜயகுமார் பவர் ஸ்டாருடன் திருமண கோலத்தில் நிற்கும் புகைப்படம் காமெடியாக இருக்க என கமெண்ட் செய்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வனிதா.

வனிதா, கடந்த சில மாதங்களுக்கு முன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் சில நாட்களிலே, கருத்து வேறுபாடு காரணமாக வெகு சீக்கிரத்திலே இருவரும் பிரிந்து விட்டனர். அடுத்ததாக சில மாதங்களிலே வனிதா, வட இந்தியாவைச் சேர்ந்த பைலட் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் வனிதா அதை மறுத்து விட்டார்.

சமீபத்தில் ஒரு ஜோசியர் நடிகை வனிதாவுக்கு நான்காவது முறையாக திருமணம் நடைபெறும் என கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை வனிதாவும் பவர் ஸ்டார் சீனிவாசனும் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. வனிதா இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். இதனால், வனிதா, பவர் ஸ்டாரை திருமணம் செய்து கொண்டாரா என ரசிகர்களிடம் கேள்வி எழுந்தது.

பின்னர், வனிதா அது பிக்கப் ட்ராப் என்ற திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், பவர் ஸ்டார் இயக்கும் அந்தப் படத்தில் பவர் ஸடாருடன் சேர்ந்து நடிப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

ஆனால், இந்த புகைப்படத்தை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டு வனிதா மற்றும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரை டேக் செய்திருந்தார். இந்த ட்வீட்டைப் பார்த்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் சிரித்து சிரித்து கண்களில் தண்ணீர் வரும் எமோஜியை கமெண்டில் பதிவிட்டிருந்தார். மற்றொரு ட்வீட்டில், இது நகைச்சுவையாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் தயவு செய்து என்னை டேக் செய்ய வேண்டாம் எனவும்  பதிவிட்டார்.

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் பின்னர் அந்த ட்வீட்களை நீக்கிவிட்டார். ஆனாலும் இதற்கு பதிலடி கொடுத்துள்ள வனிதா, அருவருப்பான, விஷமத்தனமான பெண்மணி லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் என் ரகசிய அபிமானியாகவும், தீவிர ரசிகராகவும் இருக்கிறார். என்னை துல்லியமாக பின் தொடர்கிறார். ஒரு காமெடி ஸ்கிரிட் எல்லோரும் சிரிப்பதற்காக உருவாக்கப்படுகிறது. பவர் ஸடார் நாம் ஏற்கனவே வென்றுவிட்டோம். என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, பீட்டர் பால் திருமண விஷயத்தில், ஒரு வீடியோ சந்திப்பில் வனிதாவுக்கும் லக்‌ஷ்மி ராமகிருஷணனுக்கும் முட்டிக் கொண்டது. இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை வருவதாக தெரிகிறது. இதனிடையே லக்‌ஷ்மி ராமகிருஷணனின் ரசிகர்கள் வனிதா குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என அவரிடம் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijayakumar reply to lakshmi ramakrishnan comments

Next Story
புதிய சீரியலை களமிறக்கும் விஜய் டிவி : ஹீரோ யாருனு பாருங்கThendral Vanthu Ennai Thodum
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com