Advertisment
Presenting Partner
Desktop GIF

’எங்களை காயப்படுத்தாதீங்க’: குடும்பத்தினருக்கு வனிதா வேண்டுகோள்

ஒரு உண்மையான ஹீரோ தனது சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்றுவதில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Vanitha Vijayakumar

Bigg Boss Vanitha Vijayakumar

Vanitha Vijayakumar: நடிகர் விஜய்யுடன் ’சந்திரலேகா’ படத்தில் அறிமுகமாகி, பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்து பிரபலமானார் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பல ஆண்டுகளாக தனது குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்கிறார். தனது குடும்பத்துடன்  ஒன்றிணைவதற்கான விருப்பத்தை அவர் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறார்.

Advertisment

வனிதா தனது மகள்களுடன் வசித்து வருகிறார். அவரது தந்தை விஜயகுமார், சகோதரிகள் ப்ரீதா, ஸ்ரீதேவி மற்றும் சகோதரர் அருண் விஜய் ஆகியோர் அவருடன் தொடர்பில் இல்லை. அண்மையில் ஒரு நேர்காணலில், அவர்களுடன் மீண்டும் தான் ஒன்றிணைய விரும்புவதாக தெரிவித்துள்ளார் வனிதா. ”என் மீது கோபம் இருந்தால், அவர்கள் என்னை திட்டலாம் அல்லது அடிக்கலாம், ஆனால் அமைதியாக இருந்து என்னை காயப்படுத்த வேண்டாம்” எனவும் தெரிவித்தார்.

தனது தாயார் மஞ்சுளா உயிருடன் இருக்கும் வரை, தனக்கும், தனது அப்பா  விஜயகுமாருக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்ததாக கூறிய வனிதா, அம்மா இறந்த பிறகு அந்த உறவு முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு விட்டன என்று கவலை தெரிவித்திருக்கிறார். 10 வருடங்களுக்கு முன்னர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு மெயில் அனுப்பியதாகவும், ஆனால் இதுவரை அவர்கள் யாரிடமும் இருந்து பதில் வரவில்லை என்றும் வனிதா தெரிவித்துள்ளார். அதோடு அருண் விஜய்யின் பிறந்தநாளுக்கு அவர் கூறிய வாழ்த்து செய்திக்கும் கூட இன்னும் பதில் வரவில்லை.

”ஒரு உண்மையான ஹீரோ தனது சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்றுவதில்லை. தொடர்ந்து நீங்களும் என் சகோதரிகளும் என்னை அவமானப்படுத்தி, புறக்கணிக்கிறீர்கள். இதை சரிசெய்ய போதுமான  முதிர்ச்சியுள்ளவனாக நீங்கள் இருக்கிறீர்கள். நானும் சமமாக நடத்தப்பட வேண்டும். என்னையும் என் குழந்தைகளையும் காயப்படுத்துவதை நிறுத்துங்கள்” என்று அருண் விஜய்க்கு டேக் செய்து ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார் வனிதா.

Arun Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment