நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய மகனுக்காக நடிகர் ரஜினிகாந்த் கதை கேட்டு ஓகே செய்தது என்னுடைய அப்பாவுக்காக இல்ல, அதற்கு வேறு காரணம் இருக்கிறது என்று வனிதா தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி, இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ’மாம்போ’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக் வருகிறார். இந்த நிலையில் இந்த திரைப்பட அறிமுக விழாவில் கலந்துகொண்ட விஜயகுமார், தன்னுடைய பேரனுக்காக நடிகர் ரஜினிகாந்த் தான் கதை கேட்டார் என்று கூறினார்.
மேலும், என்னுடைய பேரன் வெளிநாட்டில் சினிமா படிப்பு முடித்திருக்கிறார். அடுத்து என்ன செய்யலாம் என்று குழப்பத்தில் இருக்கிறார், நடிகராகலாமா அல்லது திரைப்படம் இயக்கலாமா என்று குழப்பத்தில் இருக்கிறார் என்று நான் சொன்னேன். அதற்கு ரஜினிகாந்த் நல்ல இயக்குனரிடம் கதை கேட்டு முதலில் நடிக்க சொல்லுங்கள் என்று சொன்னார். அதற்கு நான், விஜய் ஸ்ரீஹரியின் அப்பா ஏற்கனவே இயக்குனர் பிரபு சாலமனிடம் பேசி இருப்பதாகவும், அவர் ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் சொன்னேன். உடனே என்ன கதை என்று கேட்க பிரபு சாலமனே ரஜினியிடம் கதை சொன்னார். அவர் ஓகே செய்ததும் என்னுடைய பேரன் நல்ல படத்தில் நடிக்க தொடங்கி விட்டார் என்று விஜயகுமார் கூறினார்.
வனிதா குடும்ப பிரச்சனையின் காரணமாக அவருடைய மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரியை பிரிந்து தான் இருக்கிறார். விஜய் ஸ்ரீஹரி அவருடைய அப்பா ஆகாசுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய மகன் ஹீரோவாக நடிப்பது தனக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று வனிதா பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
மேலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் வனிதா பேசுகையில், ”ரஜினிகாந்த் அங்கிள் எனக்காக செய்த உதவி பெரியது. அவர் இப்ப என்னுடைய மகனுக்காக மட்டுமல்ல, ஏற்கனவே எனக்கு பல உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் இப்போது என் மகனுக்கு ரஜினி சார் உதவி செய்வதற்கு காரணம் என்னுடைய அப்பா கிடையாது. என்னுடைய அப்பாவிற்கும் ரஜினி அங்கிளுக்கும் ஆரம்பத்தில் நல்ல ஒரு நட்பு இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு சில பிரச்சனைகள் ஏற்பட்டு அதில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
எனக்கும் என்னுடைய அப்பாவிற்கும் பிரச்சனை வந்தபோது கூட ரஜினி சார் எனக்கு சப்போர்ட்டாக இருந்தார். எனக்காக அப்பா மற்றும் குடும்பத்தினரிடம் பேசிய போது அவருக்கு சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. அது பற்றி அவரே என்னிடம் ஃபீல் பண்ணி சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கையில் இப்போது என்னுடைய மகனுக்கு ரஜினி சார் அப்பாவிற்காக இந்த உதவியை செய்திருக்க மாட்டார். அவர் எனக்காக தான் இந்த உதவியை செய்திருப்பார் என்று நான் அடித்து சொல்வேன். இதே போல ரஜினி சார் எப்போதுமே ப்ரீத்தாவிற்கோ அல்லது ஸ்ரீ பாப்பாவிற்கோ இப்படி ஹெல்ப் பண்ணியது கிடையாது. அவருக்கு என் மீது அதிக பாசம் உண்டு. அதற்காகத்தான் என்னுடைய மகனுக்கு உதவி செய்தார் என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“