New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Bigboss.jpg)
Vanitha Vijayakumar Viral Photo : பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா புதிய தோற்றத்தில் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். கடந்த 1995-ம் ஆண்டு விஜயுடன் சந்திரலேகா படத்தில் நாயகியான அறிமுகமான அவர் அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகியிருந்தார். அந்த இடைவெளியில் இரு திருமணங்கள் செய்து விவகாரத்து செய்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் பிரபலமானார். இந்நிலையில் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்த அவர் சில நாட்களிலேயே அவரயும் பிரிந்தார். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கினார்.
இந்நிலையில் கடந்த வாரம் வனிதா 4-வது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள வனிதா, தான் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார். தற்போது பிரஷாந்தின் அந்தகன் உட்பட 4 படங்களை கைவசம் வைத்துள்ள வனிதா சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிள் ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ள நிலையில், வனிதா அதில் பங்கேற்றுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
தற்போது இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலருதம் அவரின் அவரின் தோற்றம் குறித்து ஆச்சரியமான பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். அந்த போட்டோவில் ரெட்டை ஜடை பாவடை சட்டை அணிந்துள்ள வனிதா கண்களுக்கு நீல நிற ஐலைனர் போட்டுள்ளார். அதற்கு மேட்சாக நீல நிற பொட்டு, கழுத்து நிறைய நகை என படு பயங்கரமாக உள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன இது கண்ணுல கலர் என கமெண்ட் அடித்துள்ளனர். இன்னும் சிலர் பிக்பாஸில் யார் உங்கள் ஜோடி என்றும் கேட்டு வருகின்றனர். எல்லாம் நீலமயமாக உள்ள இந்த போட்டோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.