'பிக் பாஸ் வீட்டில் அவங்க தம் அடிச்சா உனக்கு என்ன?' விசித்ராவை விளாசிய வனிதா விஜயகுமார்
பிக் பாஸ் வீட்டில் அவங்க தம் அடிச்சா உனக்கு என்ன? பெண்கள் டாட்டூ வெளியில் தெரியும்படி குத்திக்கிட்டா உனக்கு என்ன? விசித்ராவுக்கு காட்டமாக பதிலடி கொடுத்த வனிதா
பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர் ஒருவர் சிகரெட் பிடித்ததை விமர்சித்து பேசிய விசித்ராவை நடிகை வனிதா விஜயகுமார் கடுமையாக சாடி உள்ளார்.
Advertisment
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், போட்டி இப்போது விறுவிறுப்பை அடைந்துள்ளது. போட்டியாளர்களிடம் கருத்து மோதல்களும் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில், பிக் பாஸ் வீட்டில் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா படிப்பு தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன. படிப்பு மட்டும் தான் மனிதனுக்கு வாழ்க்கை இல்லை. அதை தாண்டி நிறைய திறமைகள் உள்ளன. அந்த திறமையின் படி நம் வாழ்க்கையை கொண்டு போக வேண்டும்., என்று ஜோவிகா கூறினார்.
இதற்கு விசித்ரா, யாராகயிருந்தாலும் அவர்களுக்கு அடிப்படை கல்வி அவசியம் என்று கூறினார். டாக்டர் ஆகு, என்ஜினியர் ஆகு என நான் சொல்லவில்லை. அடிப்படைக் கல்வி இருக்க வேண்டும். டிக்கெட் புக் செய்ய, பேங்க் போனால் என பல விஷயங்களுக்கு அது அவசியம் என விசித்ரா கூறுகிறார்.
இந்த விவகாரம் காரணமாக ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே மோதலாக வெடித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் இது பெரிய விவாதமாக மாறியுள்ளது. இதில் ஜோவிகாவுக்கு ஆதரவாகவும், விசித்ராவுக்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், மகளுக்கு ஆதரவாக நடிகை வனிதா விஜயகுமாரும் களத்தில் இறங்கியுள்ளார். ஜோவிகா குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மகளின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் குவிந்து வரும் பாராட்டுகளால் வனிதா மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
அதேநேரம், பிக் பாஸ் வீட்டில் விசித்ரா தன் நிலை மறந்து செயல்படுவதாக வனிதா கடுமையாக விமர்சித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் தம் அடிப்பது, பெண்கள் டாட்டூ வெளியே தெரியும்படி குத்திக் கொள்வது குறித்த விசித்ராவின் கருத்துகளுக்கு வனிதா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை வனிதா அவள் கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ”உங்க வேலையை நீங்க பாருங்க. பிக்பாஸ் வீட்ல இருக்குற பிள்ளைங்க எல்லாம் நீங்க பெத்த பிள்ளைங்க மாதிரி ஓவரா அக்கறை காட்டாதீங்க. ஒரு பொண்ணு டாட்டூ போட்டா அவங்க அப்பா அம்மா இருக்காங்க, பார்த்துப்பாங்க. ஒரு பொண்ணு ஸ்மோக் (தம் அடிப்பது) பண்ணுது, பண்ணல அவங்க பெற்றோர் பார்த்துப்பாங்க. உங்களுக்கென்ன. அந்த பிள்ளைகளை எல்லாம் நேந்து விட்டுருக்காங்களா?
நீங்க 3 பசங்களுக்கு அம்மாவா இருக்கலாம். நீங்க உங்க பசங்கள பாருங்க. ஏன் உங்க பசங்கள விட்டுட்டு 100 நாள் பிக் பாஸூக்கு போனீங்க. உங்க புள்ளைங்க என்ன பண்ண போகுதோ வெளியில. மத்த பிள்ளைங்கள ஓவரா கரெக்ட் பண்ண வேணாம். நீங்க எதுக்காக பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களோ அந்த வேலையை மட்டும் பாருங்க. மத்த விஷயத்துல மூக்கை நுழைக்காதீங்க” என வனிதா காட்டமாக கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
'பிக் பாஸ் வீட்டில் அவங்க தம் அடிச்சா உனக்கு என்ன?' விசித்ராவை விளாசிய வனிதா விஜயகுமார்
பிக் பாஸ் வீட்டில் அவங்க தம் அடிச்சா உனக்கு என்ன? பெண்கள் டாட்டூ வெளியில் தெரியும்படி குத்திக்கிட்டா உனக்கு என்ன? விசித்ராவுக்கு காட்டமாக பதிலடி கொடுத்த வனிதா
Follow Us
பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர் ஒருவர் சிகரெட் பிடித்ததை விமர்சித்து பேசிய விசித்ராவை நடிகை வனிதா விஜயகுமார் கடுமையாக சாடி உள்ளார்.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், போட்டி இப்போது விறுவிறுப்பை அடைந்துள்ளது. போட்டியாளர்களிடம் கருத்து மோதல்களும் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில், பிக் பாஸ் வீட்டில் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா படிப்பு தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன. படிப்பு மட்டும் தான் மனிதனுக்கு வாழ்க்கை இல்லை. அதை தாண்டி நிறைய திறமைகள் உள்ளன. அந்த திறமையின் படி நம் வாழ்க்கையை கொண்டு போக வேண்டும்., என்று ஜோவிகா கூறினார்.
இதற்கு விசித்ரா, யாராகயிருந்தாலும் அவர்களுக்கு அடிப்படை கல்வி அவசியம் என்று கூறினார். டாக்டர் ஆகு, என்ஜினியர் ஆகு என நான் சொல்லவில்லை. அடிப்படைக் கல்வி இருக்க வேண்டும். டிக்கெட் புக் செய்ய, பேங்க் போனால் என பல விஷயங்களுக்கு அது அவசியம் என விசித்ரா கூறுகிறார்.
இந்த விவகாரம் காரணமாக ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே மோதலாக வெடித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் இது பெரிய விவாதமாக மாறியுள்ளது. இதில் ஜோவிகாவுக்கு ஆதரவாகவும், விசித்ராவுக்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், மகளுக்கு ஆதரவாக நடிகை வனிதா விஜயகுமாரும் களத்தில் இறங்கியுள்ளார். ஜோவிகா குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மகளின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் குவிந்து வரும் பாராட்டுகளால் வனிதா மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
அதேநேரம், பிக் பாஸ் வீட்டில் விசித்ரா தன் நிலை மறந்து செயல்படுவதாக வனிதா கடுமையாக விமர்சித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் தம் அடிப்பது, பெண்கள் டாட்டூ வெளியே தெரியும்படி குத்திக் கொள்வது குறித்த விசித்ராவின் கருத்துகளுக்கு வனிதா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை வனிதா அவள் கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ”உங்க வேலையை நீங்க பாருங்க. பிக்பாஸ் வீட்ல இருக்குற பிள்ளைங்க எல்லாம் நீங்க பெத்த பிள்ளைங்க மாதிரி ஓவரா அக்கறை காட்டாதீங்க. ஒரு பொண்ணு டாட்டூ போட்டா அவங்க அப்பா அம்மா இருக்காங்க, பார்த்துப்பாங்க. ஒரு பொண்ணு ஸ்மோக் (தம் அடிப்பது) பண்ணுது, பண்ணல அவங்க பெற்றோர் பார்த்துப்பாங்க. உங்களுக்கென்ன. அந்த பிள்ளைகளை எல்லாம் நேந்து விட்டுருக்காங்களா?
நீங்க 3 பசங்களுக்கு அம்மாவா இருக்கலாம். நீங்க உங்க பசங்கள பாருங்க. ஏன் உங்க பசங்கள விட்டுட்டு 100 நாள் பிக் பாஸூக்கு போனீங்க. உங்க புள்ளைங்க என்ன பண்ண போகுதோ வெளியில. மத்த பிள்ளைங்கள ஓவரா கரெக்ட் பண்ண வேணாம். நீங்க எதுக்காக பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களோ அந்த வேலையை மட்டும் பாருங்க. மத்த விஷயத்துல மூக்கை நுழைக்காதீங்க” என வனிதா காட்டமாக கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.