/indian-express-tamil/media/media_files/P5woKwJKgszLYyHtflLx.jpg)
வனிதா விஜயகுமார் - விஜய ஸ்ரீஹரி
சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற நடிகையான வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹாரி வனிதாவின் மகளை கொஞ்சி விளையாடும் பழைய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரின் வாரிசு என்ற அடையாளத்துடன் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக அறிமுகமாகி இருந்தாலும், அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறாத நிலையில், திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்ற இவர், டிவி நிகழ்ச்சிகளின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.
விஜய்டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சாம்பியனான வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.அதே சமயம் பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா 3 திருமணங்கள் செய்து மேலும் தனது குடும்பத்தினரின் அதிருப்தியை பெற்றார்.
இதன் காரணணமாக விஜயகுமாரின் குடும்பத்தினர் அனைவருமே வனிதாவை மொத்தமாக ஒதுக்கிவிட்ட நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விஜயகுமாரின் பேத்தி திருமணத்திற்கு கூட வனிதா அழைக்கப்படவில்லை. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட வனிதாவுக்கு ஸ்ரீஹாரி என்ற மகன் உள்ளார். தற்போது அவர் தனது தந்தை ஆகாஷூடன் இருந்து வரும் நிலையில், அவ்வப்போது சமூகவலைதளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அதேபோல் சமீபத்தில் நடைபெற்ற விஜயகுமாரின் பேத்தி திருமணத்தில் ஸ்ரீஹாரி கலந்துகொண்ட நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீஹரி வனிதாவின் 2-வது மகள் ஜெய்நிதியை கொஞ்சி மகிழும் வீடியோ பதிவு இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.