தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் பிஸியாக இருக்கிற நடிகை வனிதா விஜயகுமார் சர்ச்சைக்கு பெயர்போனவர். நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகமான வனிதா விஜயகுமார். இவருக்கு சினிமா வாய்ப்புகள் வெற்றிகரமாக அமையாததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். ஆனால், திருமண வாழ்க்கையும் கருத்துவேறுபாடால் மணமுறிவில் முடிந்தது. அதற்கு பிறகு, மறுமணம் செய்துகொண்ட வனிதா விஜயகுமாருக்கு அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், 2 பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக சிங்கிள் மதராக குழந்தைகளை வளர்த்து வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மீண்டும் பிரபலமானார். அவருடைய வெளிப்படையான தைரியமான இயல்பால் சர்ச்சைக்கு உள்ளானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய வனிதா விஜயகுமார், பல்வேறு சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய விஜயகுமார், சில திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். அதுமட்டுமில்லாமல், வனிதா ஃபேஷன் கடையையும் திறந்து நடத்தினார்.
இந்த நிலையில், தனது நண்பர் ஒருவரை சந்திக்க தாய்லாந்து சென்ற நடிகை வனிதா விஜயகுமார், தாய்லாந்து பாங்காக் விமான நிலையத்தில் 3 மணி நேரம் காக்கவைக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் முரட்டுத் தனமாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
வனிதா விஜயகுமார் தனது நண்பர் ஒருவரை சந்திக்க தாய்லாந்து சென்றுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகள் நடிகை வனிதா விஜயகுமாரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அங்கே அவர் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக விமான நிலையத்திலேயே காக்க வைக்கப்பட்டுள்ளார். ஆனா, வனிதா விஜயகுமார் தனது வழியில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தாய்லாந்துக்குள் செல்ல அதிகாரிகள் அனுமதிள்ளனர்.
இது குறித்து வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகளால், கடந்த 3 மணி நேரத்தில் விமான நிலைய குடியேற்றத்தில் சிக்கிக் கொண்டேன். பாங்காக் விமான நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது… டியூட்டி ஃப்ரீ இல்லை சாப்பாடு இல்லை காபி இல்லை.. பாங்காக் விமான நிலையத்தில் பிரிண்டர் இல்லை. தகுதியான பயணிகளுக்கு வருகையின் போது விசாவிற்கு பிரிண்ட் எடுக்க பிரிண்டர் இல்லை… எப்போது பாங்காக் வந்தாலும் விசா தான். ஆனால், இப்போது அவர்கள் தைலி பாஸ் எனப்படும் நுழைவுச் சான்றிதழுக்கான பாலிசியை வைத்துள்ளனர். அதை நான் ஏற்கனவே இந்தியாவிலிருந்து பெற்றுள்ளேன்…. அது இல்லாமல் நாட்டிற்குள் நுழைய முடியாது. ஏனென்றால் எந்த அச்சுப்பொறியும் இல்லை. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் மிகவும் முரட்டுத்தனமாகவும் மற்றும் நெறிமுறை இல்லாமலும் நடந்துகொண்டனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலாளர் என்னை மீண்டும் ஒரு டிக்கெட் வாங்கிக்கொண்டு இந்தியாவிற்கு சென்று பிரிண்ட் அவுட் எடுக்கச் செல்லுங்கள் என்று கூறுகிறார்.” என்று தெரிவித்துள்ளார். இதனால், வனிதா விஜயகுமாரின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பதிவிட்டனர்.
இதையடுத்து, வனிதா விஜயகுமார் இன்ஸ்டாவில் பதிவிட்ட மற்றொரு பதிவில், “இலங்கை ஏர்லைன்ஸ் அதிகாரிகளின் வேலைதான் இது. அவர்களுடைய தேவையில்லாத செயலால் நான் தாய்லாந்து விமான நிலையத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைக்கப்பட்டேன். 4 மணிநேரம் விட்டுக்கொடுக்காமல், பொருத்தமில்லாத நிராகரிப்பை ஏற்க மறுத்து…இப்பொழுதும் நடைமுறை அணுகுமுறையுடனும் விவேகத்துடனும் என் வழியில் போராடினேன்…நான் வெற்றிகரமாக தாய்லாந்திற்குள் நுழைந்துவிட்டேன்…குடியேற்ற காவல் துறை மற்றும் விமான நிலைய பயணிகள் சேவைக்கும் மனிதநேயத்துக்கும் நான் நன்றி கூறுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“