/tamil-ie/media/media_files/uploads/2023/01/Vanitha-and-azeem.jpg)
வனிதா விஜயகுமார் மற்றும் அசீம் (படம்: வனிதா விஜயகுமார் ட்விட்டர்)
பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அவருக்கு ஆதரவளித்துள்ளார் வனிதா விஜயகுமார்.
விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்த சீசனின் இறுதிப்போட்டிக்கு அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் தேர்வாகினர். இதில் ஷிவின் மூன்றாம் இடத்தை பிடித்தார். முதல் இடத்தைப் பிடிக்க அசீம், விக்ரமன் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் விக்ரமன் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
அசீம் பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராகியது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அசீமின் வெற்றி குறித்து பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
மறுபுறம் அசீம் பிக்பாஸ் வெற்றி மூலம் கிடைத்த ரூ.50 லட்சத்தில் ரூ.25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோர்களை இழந்த ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு தருவதாக அறிவித்து அதிரடி காட்டினார்.
அசீமுக்கு எதிராக பலரும் பதிவிட்டு வரும் நிலையில், அசீமை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா விஜயக்குமார் அவருக்கு ஆதரவளித்துள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வனிதா, ”இங்கு நாங்கள் யாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வரவில்லை, நாங்க எல்லாம் ரூல்ஸை பிரேக் பண்றவங்க,” என பதிவிட்டு அசீமை டாக் செய்துள்ளார்.
We are not here to set examples for anyone… we are here to BREAK THE RULES! @ActorAzeem_#BiggBoss6Tamil#Azeem#BiggBossTamil@vijaytelevision@disneyplusHSTampic.twitter.com/eawU1OVsHj
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) January 28, 2023
நடிகை வனிதா, அசீமை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து ஆதரவு அளித்ததற்கு முக்கிய காரணம், இந்த சீசனில் விக்ரமன் வெற்றிபெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஏனெனில் விக்ரமனுக்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்ததற்கு வனிதா கடுமையாக விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருக்கு மிரட்டல்களும் வந்ததாக வனிதா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.