/indian-express-tamil/media/media_files/qRicm8uV4PclLETiUHgX.jpg)
நடிகை வனிதா மகன் ஸ்ரீஹரி குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்; பக்குவமாக பதில் அளித்த ஜோவிகா
ஆண்களின் பின்னாடி ஓடி ஓடி ரொம்ப சோர்ந்து போயிட்டேன். இனி ஒருபோதும் அந்த தப்பை செய்யவே மாட்டேன் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விஜய் உடன் சந்திரலேகா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. பின்னர் சில திரைப்படங்களில் நடித்த வனிதா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். முதல் 2 திருமணங்களில் இருந்து வெளியேறிய வனிதா, பின்னர் சினிமா, சின்னத்திரை என மீண்டும் லைம்லைட்டிற்கு வந்தார். இந்தநிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு விஷூவல் எஃபெக்ட் டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் திருமணமான சில நாட்களிலே, அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பீட்டர் பாலை வனிதா பிரிந்தார்.
தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வரும் வனிதா, அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா கண், பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் வனிதா நடத்தி வருகிறார்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வனிதா மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். அதனைத்தொடர்ந்து தன்னுடைய மகளான ஜோவிகாவையும் அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறக்கினார். தொடர்ந்து தன்னுடைய மகள் ஜோவிகாவை எப்படியாவது ஹீரோயினாக்க வேண்டும் என போராடி வருகிறார்.
இந்தநிலையில் நடிகை வனிதா அண்மையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், உங்களுக்கு யாராவது ஒருத்தரைத் தான் தேர்ந்தெடுக்கணும் அப்படின்னு வாய்ப்பு இருந்தா உங்களோட அப்பாவை தேர்ந்தெடுப்பீங்களா? அல்லது உங்களோட மகனை தேர்ந்தெடுப்பீங்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வனிதா, ”யார் என்னை தேர்ந்தெடுக்குறாங்களோ, அவங்கள தான் நான் தேர்ந்தெடுப்பேன். ஆண்களின் பின்னாடி ஓடி ஓடி ரொம்ப சோர்ந்து போயிட்டேன். இனி ஒருபோதும் அந்த தப்பை செய்யவே மாட்டேன்,” என்று கூறினார்.
பின்னர் மற்றொரு ரசிகர் வனிதா மகள் ஜோவிகாவிடம், ”உங்களின் அண்ணனான ஸ்ரீஹரியை (ஆகாஷிற்கு பிறந்த மகன்) உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும். அவர் உங்களுக்காக திரும்ப வருவாரா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த ஜோவிகா, ”நீங்கள் யாரையாவது உண்மையாக நேசித்தால், அவர்களை அப்படியே ஃப்ரீயா விட்டு விடுங்கள். அது உங்களிடம் மீண்டும் வந்தால் அது உங்களுடையது. இல்லை என்றால் அது உங்களுடையது இல்லை” என்று பதில் அளித்து இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.