New Update
/
மூன்றாம் திருமணம் குறித்து நடிகை வனிதா அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் விஜய் உடன் சந்திரலேகா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. பின்னர் சில திரைப்படங்களில் நடித்த வனிதா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். முதல் 2 திருமணங்களில் இருந்து வெளியேறிய வனிதா, பின்னர் சினிமா, சின்னத்திரை என மீண்டும் லைம்லைட்டிற்கு வந்தார். இந்தநிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு விஷூவல் எஃபெக்ட் டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் திருமணமான சில நாட்களிலே, அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பீட்டர் பாலை வனிதா பிரிந்தார்.
தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வரும் வனிதா, அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா கண், பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் வனிதா நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வனிதா மீண்டும் திருமணம் குறித்து பேசி இருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வனிதாவிடம் தொகுப்பாளர் திருமணம் பற்றி பல கேள்விகள் கேட்டார். அதற்கு கோபப்படாமல் பதில் சொன்ன வனிதா, தான் சட்டப்படி இரண்டு முறை தான் திருமணம் செய்து இருப்பதாகவும், மூன்றாவது முறையும் செய்வேன் என கூறி இருக்கிறார்.
3 ஆம் தேதி திருமணம் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு என கூறிய வனிதாவிடம் மாப்பிள்ளை கருப்பா இருக்கணுமா இல்லை செகப்பா இருக்கணுமா என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்த வனிதா ‘பச்சையாக இருக்கனும். குபேரன் போல பச்சையாக இருக்க வேண்டும். அப்படி ஒருவரை தான் தேடிக்கொண்டிருக்கிறேன்’ என காட்டமாக பதில் கொடுத்தார். மேலும், எப்போது பேட்டி கொடுத்தாலும் திருமணம் பற்றிய கேள்விகளை தான் கேட்கிறார்கள் எனவும் வனிதா கோபமாக பேசி இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.