என் வாழ்க்கையில் அடுத்து யார்? நடிகை வனிதாவின் அசத்தல் பதில்

Vanitha vijayakumar talks about next person in her life: தன் வாழ்க்கையில் அடுத்து வரும் நபர் குறித்து வெளிப்படையாக பேசிய வனிதா; ரசிகர்கள் ஷாக்

தன் வாழ்க்கையில் அடுத்து வரும் நபர் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

சந்திரலேகா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வனிதா விஜயகுமார். திருமணத்திற்குப் பின் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வனிதா, விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார். அதன்பின் விஜய் டிவியின் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். பின்னர் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.

சமீபத்தில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வனிதா, நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தற்போது வாசுவின் கர்ப்பிணிகள், பிக்கப் ட்ராப் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி வித்தியாசமான கருத்துக்களைக் கூறி ட்ரெண்டிங்கிலே இருப்பார். சமீபத்தில் பீட்டர் பாலுடனான உறவில் இருந்து வெளியேறிய வனிதா, பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக நின்று பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அது பிக்கப் ட்ராப் என்ற படத்திற்கான ப்ரோமோஷன் எனத் தெரிய வந்தது.

இந்தநிலையில், கென்னி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் வனிதா, அந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டார். அப்போது செய்தியாளர்கள், ஜோதிடப்படி உங்கள் வாழ்வில் அடுத்து வரும் நபரின் பெயர் ‘S’ என்கிற எழுத்தில் ஆரம்பிக்கும் என பிக்கப் ட்ராப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தீர்கள். அந்த நபர் யார் என்று இதுவரை சொல்லவில்லையே என கேட்டனர். அதற்கு வனிதா, எனக்கே தெரியவில்லை, அப்புறம் நான் எங்கே உங்களுக்கு சொல்றது என கூறினார்.

அதன்பின், வனிதா வாழ்க்கையில் அடுத்து ஒருவர் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறீர்களா? என ஒருவர் கேட்க, என்னங்க உங்க பிரச்சனை, சொல்ல முடியாதுங்க, அதெல்லாம் சஸ்பென்ஸ் ஸ்டோரி என வனிதா சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கலந்துக் கொள்ளவில்லையே என கேட்டதற்கு, அந்த அம்மா பெரிய பணக்காரி, அவங்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியெல்லாம்  தேவையில்லை எனக் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijayakumar talks about next person in her life

Next Story
சீரியலை போலவே நிஜ வாழ்க்கையிலும் சோகம்… தடைகளை தாண்டி வந்த பாவம் கணேசன் சித்ரா!paavm ganesan serial news: paavm ganesan serial Chitra Vilasini real life story
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com