அம்மன் கெட்டப்பில் இப்படி செய்யலாமா? அவர் மன்னிப்பு கேக்கனும்….. வனிதாவுக்கு எதிராக பிரபல நடிகர்
Actor Nakul latest interview in tamil: நடிகை வனிதா விஜயகுமார் பற்றி தான் பேச கூட விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள நடிகரும், ‘பிக் பாஸ்’ ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவருமான நகுல், "யாரும் சேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க விரும்பல" எனக் கூறியுள்ளார்.
Actor Nakul latest interview in tamil: நடிகை வனிதா விஜயகுமார் பற்றி தான் பேச கூட விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள நடிகரும், ‘பிக் பாஸ்’ ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவருமான நகுல், "யாரும் சேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க விரும்பல" எனக் கூறியுள்ளார்.
Bigg Boss tamil fame Vanitha vijayakumar Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கொண்டு ‘பிக் பாஸ்’ ஜோடிகள் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார் திடீரென விலகுவதாக அறிவித்தார். மேலும், அவர் வெளியேறியதற்கு நிகழ்ச்சியின் நடுவராக உள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
Advertisment
பின்னர், இந்த நிகழ்ச்சிக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த வனிதா, ‘நாடா இல்லை காடா’ என்கிற போட்டியில் காளி போல வேடம் அணிந்து ஆடினார். நடத்திற்கு பிறகு அவரது நடனம் குறித்து கமெண்ட் சொன்ன ரம்யா கிருஷ்ணனுடன் வனிதா மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தார். அதோடு ‘தன்னை மற்ற போட்டியாளர்கள் உடன் compare செய்யாதீர்கள்’ என வனிதா ரம்யா கிருஷ்ணனை பார்த்து கேட்க, இது competition அதெப்படி compare பண்ணாமல் இருக்க முடியும் என ரம்யா கிருஷ்ணன் பதில் கூறியிருந்தார்.
Advertisment
Advertisements
இந்த சம்பவம் குறித்து வனிதா வெளியிட்டிருந்த அறிக்கையில், "ஒரு பெண் தான் இன்னோரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் , அவர்களை வயதில் மூத்தவர்கள் வென்று விடுவார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையை மறந்து விட்டார்கள்" என்று கூறி இருந்தார். இங்கு வனிதா வனிதா சீனியர் நடிகை என்று சொன்னது ரம்யா கிருஷ்ணனை தான் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இது குறித்து நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனிடம் கேட்கப்பட்ட போது 'நோ கமெண்ட்ஸ்' என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார். வனிதா குறித்து பேசியுள்ள நிகழ்ச்சியின் மற்றொரு நடுவர் நகுல், "இந்த பிரச்சனை குறித்து பங்கேற்ற வனிதாவிற்கு மற்றவர்களுடன் நாங்கள் ஒப்பிட்டது பிடிக்கவில்லை. நங்கள் மற்றவர்கள் எப்படி ஆடுகிறார்கள் அதை வைத்து தான் அவர்களுக்கு கமன்ட் சொன்னோம். ஆனால், அவர் அதை தவறாக புரிந்துகொண்டார்.
நாங்கள் மிகவும் தன்மையாக தான் சொன்னோம். ஆனால், வனிதா எங்களை ஒரு அசிங்கமான பெயரை சொல்லி திட்டியுள்ளார் என்று செட்டில் இருந்தவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்கள் செட்டில் மேடம் எவ்ளோ பெரிய ஆளு. அவர்களை இப்படி பேசலாமா. ரம்யா மேம்மிடம் வனிதா மன்னிப்பு கேக்கணும். இதெல்லாம் அவருக்கு புதுசு இல்லை. அவங்களை பத்தி நான் பேச கூட விரும்பல. யாரும் சேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க விரும்பல. அம்மன் கெட்டப்பில் இருந்து இப்படி பச்சையா பேசி இருக்காங்க" என்று கூறியுள்ளார்.