vanitha vijayakumar latest news in tamil: பிக்பாஸ் புகழ் வனிதா விஜய் குமார் பற்றி தினமும் ஒரு பரபரப்பான செய்தி அல்லது வைரல் செய்தி வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த அளவிற்கு பிரலமான ஒருவராக வலம் வருகிறார் வனிதா. மேலும் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார் என்ற நிச்சயம் மிகையாகாது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை வனிதா மீது பல சர்ச்சையான கருத்துக்கள் மற்றும் செய்திகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தாலும் அதற்கெல்லாம் சமூக வலைதள பக்கங்கள் மூலமாக பதிலடி கொடுத்து விடுகிறார். அவர் சமீபத்தில் சந்தித்த பிரச்சனைகளான பீட்டர் பால் திருமண – பிரிவு, விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் ஷோவில் பங்கேற்று ஜட்ஜ் ரம்யா கிருஷ்ணன் உடன் சண்டை போட்டு வெளியேறியது, நடிகர் பவர் ஸ்டார் உடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலானது என அனைத்திற்கும் தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் சாட்டையை சுழற்றி வருகிறார்.

தற்போது பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வரும் வனிதா தனக்குள் உள்ள ஹியூமர் சென்ஸை வெளிப்படுத்தியுள்ளார். வனிதா தனது சமீபத்திய இன்ஸ்டா பதிவில் மீம் ஒன்றை பதிவிட்டு அவரிடம் உள்ள நகைச்சுவை உணவர்வை வெளிப்படுத்தி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.இவரின் இந்த நகைச்சுவை உணர்வு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வனிதா பதிவிட்டுள்ள மீம் வடிவேலு ஹோட்டலுக்கு சென்று ஊத்தாப்பம் கேட்க்கும் பிரபலமான காமெடியை டெம்ப்லேட்டாக கொண்டுள்ளது. இதில், ‘குண்டாகவும் இல்லாம ஒல்லியாகவும் இல்லாமல் நல்ல மூக்கும் முழியுமா சமையல் தெரிஞ்ச Chubbyஆ ஒரு பொண்ணு வேணும்’ என வடிவேலு கேட்பது போலவும் அதற்கு சர்வர் ‘அண்ணனுக்கு ஒரு வனிதா’ என சொன்வது போலவும் அந்த மீம் உள்ளது. இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் இது மீம் பேஜ் என ஒரு நொடி நினைத்துவிட்டோம் என கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.


“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“