scorecardresearch

1, 2, 3, … அடுத்த பிசினஸை ஆரம்பித்த வனிதா… வாழ்த்த வந்த நட்சத்திர ஜோடி!

Actress and YouTuber vanitha vijayakumar now launches new studio for upcoming cinema and serial artist Tamil News: ஃபேஷன் டிசைனராகவும் புதிய அவதாரம் எடுத்த வனிதா, முதல் முதலில் பேஷன் டிசைனராக, மேக்கப் ஆர்ட்டிஸ்ட், சிகை அலங்காரம் என ஒரு சேர ஸ்டேஜில் ஏறிய அனுபவத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார்.

1, 2, 3, … அடுத்த பிசினஸை ஆரம்பித்த வனிதா… வாழ்த்த வந்த நட்சத்திர ஜோடி!
vanitha vijayakumar

vanitha vijayakumar Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெரும் புகழ் அடைந்தவர் நடிகை வனிதா விஜய குமார். கடந்த 1995 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான இவர், மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் திருமணம், குழந்தை என செட்டிலான இவர் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டதால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது இரு பெண் குழந்தைகளுடன் தனித்து வசிக்க தொடங்கினார்.

வனிதா 2013ம் ஆண்டில் வெளிவந்த “நான் ராஜாவாக போகிறேன்” படத்தில் நடத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து அவர் “சும்மா நச்சுனு இருக்கு” (2013) படத்தில் நடித்தார். பின்னர் தயாரிப்பாளராக மாறிப்போன வனிதா “எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல்” (2015) என்ற படத்தைத் தயாரித்தார். இப்படத்தை அவரது அப்போதைய காதலரான நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் இயக்கினார்.

இதைத்தொடர்ந்து வனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். அவருக்கு பிக்பாஸ் வீட்டில் பல எதிர்ப்புகள் இருந்தாலும், வெளியுலகில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார். இவருக்கு என வலைதள பக்கங்களில் ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் பாதியில் வெளியேற்றப்பட்டு இருந்தாலும், அவர் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஒருவராகவே இருந்தார்.

தொடர்ந்து “குக் வித் கோமாளி” சீசன் 1ல் கலந்து கொண்ட வனிதா அங்கு தான் கற்று வைத்திருந்த மொத்த சமையல் வித்தையையும் இறக்கினார். தனக்கே உரித்தான பாணியில் அவ்வப்போது சில பஞ்களை வைத்த இவர் முதல் சீசனின் டைட்டில் வின்னர் பட்டத்தைத் தட்டிச் சென்றார். இதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவியவே சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார்.

இதற்கிடையில் ஒரு யூடியூப் சேனலை தொடங்கிய வனிதா, அதில் தனது சமையல் குறிப்புகளை வீடியோவாக பதிவேற்றி வந்தார். அவரது ரசிகர்கள் வழக்கம் போல் ஆதரவு அளித்தனர். இதேபோல் மேக்கப் செய்வதிலும் கில்லாடியான வனிதா அது குறித்த டிப்ஸ்களையும் வழங்கி வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வனிதா, கடந்த ஆண்டில் தான் புதியதாக தொடங்கியுள்ள “பொட்டிக் ஷாப்” குறித்து தெரிவித்து இருந்தார். அந்த ஷாப்பில் சினிமாவில் நடிப்பதற்கு ஆசைப்படுவோருக்கு போட்டோஷூட் நடத்திக் கொள்ள பிரத்யேக ஆடைகள் விற்கப்படுகின்றன. இந்த பிசினஸ் ஒருபக்கம் நன்றாக சென்றுகொண்டிருக்க, வனிதா ஃபேஷன் டிசைனராகவும் புதிய அவதாரம் எடுத்தார். அவர் தான் முதல் முதலில் பேஷன் டிசைனராக, மேக்கப் ஆர்ட்டிஸ்ட், சிகை அலங்காரம் என ஒரு சேர ஸ்டேஜில் ஏறிய அனுபவத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த நிலையில் வனிதா தனது பெயரிலே புதிய ஸ்டூடியோ ஒன்றையும் தொடங்கியுள்ளார். இந்த ஸ்டூடியோவில் சினிமா, சீரியலில் நடிப்பதற்காக போட்டோஷூட் எடுக்கப்படும் என்றும் மணப்பெண் அலங்காரம், பேஷன் ஸ்டைலிங் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்டூடியோவின் திறப்பு விழா நேற்றைய தினம் அரங்கேறிய நிலையில், இந்நிகழ்ச்சியில் தாடி பாலாஜி, காயத்ரி ரகுராம், நடிகை ரேகா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். மேலும், நட்சத்திர ஜோடியான சினேகன் – கன்னிகா போன்றோரும் பங்கேற்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vanitha vijayakumar tamil news bigg boss fame vanitha open studio