Vanitha vijayakumar Tamil News: தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்திருந்தாலும் நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமானது என்னவோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் தான். இந்த அறிமுகம் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஷோ-களில் தோன்றி வந்த வனிதா குக் வித் கோமாளி ஷோ சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவே வனிதா மேலும் பிரபலமடைந்தார். அதோடு இந்த ஷோ-வில் டைட்டில் வின்னராகவும் வனிதா தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது சினிமாவில் பிசியாக வலம் வரும் வனிதா சில படங்களை கை வசம் வைத்துள்ளார். தவிர, டிவி ஷோகளிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். இதனால் இவர் பற்றிய பரபரப்பான மற்றும் வைரல் செய்திகள் தின்தோறும் வெளியாகி வண்ணம் உள்ளது. ஏற்கனவே 3 திருமணங்களை முடித்த நடிகை வனிதா விஜயகுமார் இப்போது 4வது திருமணம் செய்கிறார் என்ற செய்தி கடந்த வாரம் வைரலானது.

ஆனால், ‘பிக்கப் டிராப்’ படத்திற்காக பவர் ஸ்டாருடன் நடிக்கும் படத்திற்காக திருமண கோலத்தில் போட்டோ ஷுட் நடத்தியிருந்தார். அந்த புகைப்படங்கள் தான் வனிதா திருமணம் குறித்து வந்த வைரல் செய்திக்கு காரணமாக இருந்தது. இது போன்ற பட ப்ரோமோஷனை நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து வரும் நிலையில், ‘நடிகை நயன்தாரா கூட தான் ராஜா ராணி திரைப்படத்திற்காக ஆர்யாவுடன் திருமணம் என புரொமோஷன் செய்தார். அப்போது அவரை கேட்க யாருக்காவது தைரியம் இருந்ததா, இப்போது மட்டும் கேட்கிறீர்கள். அவருக்கு ஒரு நியாயம், வனிதாவுக்கு ஒரு நியாயமா என ஒரு சிலர் வனிதாவுக்கு சப்போர்ட் செய்து பேசி வருகின்றனர்.

இதை பிடித்துக்கொண்ட வனிதா, அதானே ‘இதை மறந்துட்டேனே’ என்று கலாய்த்துள்ளார். இதனால், நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் அவரது கமெண்டிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வனிதாவை ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“