Vanitha Vijayakumar Tamil News: எதையுமே பட்டென்று உடைத்துப் பேசியே பழக்கப்பட்டவர் வனிதா விஜயகுமார். பேச்சு மட்டுமல்ல, அவரது செய்கையும் வெளிப்படையானது. அப்படித்தான், சர்ச்சை கிளம்பும் என தெரிந்தாலும், பீட்டர் பாலை மணந்தார்.
யூ டியூப் சேனல் தொடங்கும் முயற்சியில் இருந்த வனிதாவுக்கு, பீட்டர் பால் சில உதவிகள் செய்ய, அதில் இருவர் மனமும் இணைந்து கல்யாணத்தில் முடிந்தது. இன்னொருவரின் கணவரை மணப்பதா? என லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி என சிலர் கிளப்பிய சர்ச்சைகளுக்கு சுடச்சுட பதிலடி கொடுத்தார் வனிதா.
திருமணத்திற்கு பிறகு தனது குழந்தைகள், பீட்டர் பால் என ஒரே குடும்பமாக நின்று வீடியோ, போட்டோ என மகிழ்ச்சி பொங்க வெளியிட்டு வந்தார் வனிதா. அண்மையில் குடும்ப சகிதமாக கோவா சென்று, அங்கு எடுத்த போட்டோக்களையும் அப்டேட் செய்து வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி சென்று கொண்டாடிய கோவாவில், அந்த ஜோடிக்கு சற்றும் சளைக்காமல் வனிதா – பீட்டர்பால் எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களும் இணையத்தை கலக்கின. இதற்கிடையே கோவா சென்ற இடத்தில் வனிதா- பீட்டர்பால் இடையே வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும், இருவருக்கும் இடையே கடுமையான மோதல் என்பதாகவும் சில செய்திகள் இணையத்தில் உலவுகின்றன.
இது வனிதாவை குறிவைக்கும் அவரது எதிரிகளின் சதியா? என்பதும் தெரியவில்லை. காரணம், வனிதாவின் வெளிப்படையான பேச்சுகளும் செய்கைகளும் அவரைச் சுற்றி அவ்வளவு எதிரிகளை குவித்து வைத்திருக்கின்றன.
கணவன் – மனைவி இடையே பிரச்னை இல்லாத இடம் ஏது? அந்த வகையில் வனிதா- பீட்டர்பால் இடையே ஊடல்கள் நிகழ்ந்திருந்தால், அது ஒன்றும் பெரிய பாவச்செயல் இல்லை. ஊடலும், கூடலும் இல்லாத வாழ்க்கை ஏது? இது பற்றி வனிதா யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால் வனிதா, தனது சொந்த வாழ்வையும்கூட வெளிப்படையாகவே இருக்க விரும்புகிறவர். இந்த ஹேஸ்யங்களைகூட வனிதா அதிக நாட்கள் நீடிக்க விடமாட்டார் என்பது மட்டும் நிஜம். எப்போதும் போல வனிதாவே ஓப்பனாக உண்மை நிலவரங்களை சொல்லவே செய்வார். அது வரையிலாவது வதந்திகளை பரப்பாமல் இருக்கலாமே? என ஆதங்கப்படுகிறார்கள், வனிதாவின் ரசிகர்களும் அபிமானிகளும்!
பீட்டர்பால் உதவியுடன் வனிதா தொடங்கிய யு டியூப் சேனலில் ஒவ்வொரு வீடியோவும், சர்வ சாதாரணமாக 2 லட்சம் வியூஸ்களை தாண்டிக் குதிக்கிறது. அவர்களின் வாழ்க்கை மட்டும் துவண்டு விடுமா என்ன?
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Vanitha vijayakumar tamil news vanitha vijayakumar peter paul row
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!